Fact Check: அண்ணாமலையை “ஆடு” என்று விமர்சிக்கும் எதிர்கட்சியினருக்கு பதிலளித்த வானதி சீனிவாசன்; வைரல் நியூஸ்கார்டின் உண்மை என்ன?

எதிர்கட்சியினர் பாஜக தலைவர் அண்ணாமலையை “ஆடு” என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனத்திற்கு பதிலளித்ததாக புதியதலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
வானதி சீனிவாசன் குறித்து வைரலாகும் நியூஸ் கார்ட்
வானதி சீனிவாசன் குறித்து வைரலாகும் நியூஸ் கார்ட்
Published on
1 min read

"ஏங்க, கெடா மாடு மாதிரி இருக்கவர ஆட்டுக்குட்டின்னு சொல்ற அளவுக்குதாங்க திமுகவினருக்கு அறிவு; திமுகவினர் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என கிண்டல் செய்வதற்கு வானதி சீனிவாசன் பதிலடி” என்று ஏப்ரல் 3ஆம் தேதியிட்ட புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் நியூஸ் கார்ட்
வைரலாகும் நியூஸ் கார்ட்

Fact-check:

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அவ்வாராக அவர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. தொடர்ந்து, ஏப்ரல் 3ஆம் தேதி புதிய தலைமுறை அவ்வாறு நியூஸ் கார்டை பதிவிட்டுள்ளதா என்று அதன் சமூக வலைதள பக்கங்களில் தேடினோம்.

அப்போது, வைரலாகும் நியூஸ் கார்டில் உள்ள அதே புகைப்படத்துடன், “திமுகவினருக்கு என் மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களைச் செய்வார்கள்” என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டை ஏப்ரல் 3ஆம் தேதி புதிய தலைமுறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

மேலும், வைரலாகும் நியூஸ் கார்டு போலி என்றும் அவ்வாறாக புதிய தலைமுறை நியூஸ் கார்ட் வெளியிடவில்லை என்றும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளது.

புதிய தலைமுறையின் விளக்கம்
புதிய தலைமுறையின் விளக்கம்

Conclusion:

நம் தேடலின் முடிவாக அண்ணாமலையை “கெடாமாடு” என்று வானதி சீனிவாசன் கூறியதாக வைரலாகும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்ட் போலி என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in