“பிரிட்டனில் அதிகாரம் மாறிய உடனேயே வெளிப்பாடுகள் வெளிவர ஆரம்பித்தன: ரிஷி சுனக் தோற்ற பிறகு, மோடி மற்றும் அவரது அமைச்சர்களின் கருப்பு பணம் அம்பலமானது. மோடியின் அமைச்சர்களின் கருப்புப் பணம் 14 ஆண்டுகளில் நூறு மடங்கு அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் ரகசிய வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
முதல் 24 பெயர்கள் பின்வருமாறு.
(டாலரில் தொகைகள்)
1 - நரேந்திர மோடி (56800000000000)56.8 லட்சம் கோடி (LkCr) usd=R.4089 LkCr
2 - அமித் ஷா
(7800000000000)0.78 LkCr USD, ரூ 56 LkCr
3 - ஸ்மிருதி ஜூபியன் இரானி
(158000000000000) 15.8 LkCr USD, Rs1136 LkCr
4 - ராஜ்நாத் சிங்
(8200000000000)8.2 LkCr USd, Rs590 LkCr
5 - ஜெய் ஷா
(15400000000000)15.40
LkCr USD
6 - அனுராக் தாக்கூர் (2890000000000)2.89 LkCr USD, Rs208LkCr
7 - நிர்மலா சீதாராமன்
(9000000000000) 0.9LkCr USD, Rs64.8LkCr
8 - பியூஷ் கோயல் (15000000000000)1.5LkCr USD, Rs108LkCr
9 - கிரிராஜ் சிங் (75000000000000)7.5LkCr USD, Rs540LkCr
10 - அஷ்வனி வைஷ்ணவ் (28000000000000)2.8LkCr USd, Rs201LkCr
11 - ஜோதிராதித்ய சிந்தியா (5900000000000) 0.59LkCr USd, Rs42.4LkCr
12 - டாக்டர் மன்சுக் மாண்டவியா (220000000000000) 22LkCr USD, Rs1584Lk
13- ஜகத் பிரகாஷ் நத்தா (7688800000000)7.6LkCr usd, Rs167.2LkCr
14- ஷிராஜ் சிங் சௌஹான் (58211400000000)58.2LkCr USD, ரூ 4190LkCr
15- மனோகர் லால் கட்டார்
(19800000000000)1.9LkCr USD, Rs137LkCr
16- கிரன் ரிஜிஜு (13580000000000)13.6LkCr USD, Rs976LkCr
17- ஜெனரல் வி.கே.சிங் (820000000000)0.82LkCr USd, Rs59LkCr
18- அர்ஜுன் ராம் மேக்வால் (1450000000000)1.45LkCr USD, Rs104LkCr
19- மீனாட்சி லேகி (2890000000000)
2.9LkCr USd, Rs209LkCr
20 - கேசவ் பிரசாத் மௌரியா (9000000000000) 0.9LkCr USD, Rs64.8LkCr
21- தேவேந்திர ஃபட்னாவிஸ் (15000000000000)1.5LkCr USD, Rs108LkCr
22- யோகி ஆதித்ய நாத் (3500000000000)3.5LkCr USD, Rs252LkCr
24. சஞ்சீவ் குமார் பல்யான் (189008000000000)18.9LkCr USd, Rs1360LkCr
அனைத்து தேசபக்தர்களே! நாட்டின் நலன் கருதி இந்த பதிவை அனுப்பவும்.... ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைக்கவும்.
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ. 358,679,863,300,000 (சுமார் 1.3 டிரில்லியன் டாலர்கள்), இந்த பணம், வரிவிலக்குக்காக டெபாசிட் செய்த 2000 இந்தியர்களுக்கு சொந்தமானது. இந்தியாவை 10 அமெரிக்காவாக மாற்றவும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்தியாவை வளர்ந்த வல்லரசு நாடாக மாற்றவும் இவ்வளவு பணம் போதும்.. தயவுசெய்து இந்த செய்தியை அனுப்ப முன்வாருங்கள்.. ஒரு இந்தியனாக நான் அதை உங்களுக்கு அனுப்புகிறேன்???
நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 30 பேருக்கு இந்த செய்தியை அனுப்புங்கள்!!! நீங்கள் ஒரு இணைப்பைச் சேர்த்தால் போதும், எந்த நேரத்திலும் நாடு முழுவதும் இணைக்கப்படும். அதை முன்னனுப்பினால் போதும், இதற்கு 2-3 வினாடிகள் மட்டுமே ஆகும்” என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக Wiki Leaks இணையதளத்தில் தேடுகையில் வைரலாகும் தகவல் போன்று எதுவும் வெளியிடப்படவில்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து தேடுகையில் ஏற்கனவே 2011ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ரகசிய வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் முதல் 24 இந்தியர்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டதாக ஒரு தகவல் வைரலானது. அதில் உள்ள தொகையும் தற்போது வைரலாகும் தகவலில் உள்ள தொகையும் ஒன்றாக இருப்பதை நம்மால் காண முடிந்தது.
மேலும், தற்போது வைரலாகும் தகவலில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெய் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் 2011ஆம் ஆண்டு வைரலான தகவல் தவறானது என்று விக்கிலீக்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பிரிட்டனில் அதிகாரம் மாறிய உடனேயே மோடி மற்றும் அவரது அமைச்சர்களின் கருப்பு பணம் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் ஏற்கனவே 2011ஆம் ஆண்டு வைரலான தகவலில் இருந்த பெயர்களை மட்டும் மாற்றி தற்போது தவறாக பரப்பி வருகின்றனர் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.