நடிகர் பிரபாஸ் கேரள மாநிலத்திற்கு வழங்கிய ரூபாய் 32 கோடி நிதி உதவி 
Tamil

Fact Check: வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக நடிகர் பிரபாஸ் ரூ. 32 கோடி வழங்கினாரா?

வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக நடிகர் பிரபாஸ் ரூபாய் 32 கோடி வழங்கியதாக வைரலாகும் தகவல்

Ahamed Ali

“நடிகர் பிரபாஸ் வயநாட்டில் ஏற்பட்ட நிலசரிவு நிவாரணத்திற்கு 32 கோடி நிதி அளித்துள்ளார்” என்ற கேப்ஷனுடன் நடிகர் பிரபாஸ் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூபாய் 32 கோடி நிதி உதவி அளித்ததாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அவர் ரூபாய் 2 கோடி மட்டுமே நிதி உதவி வழங்கினார் என்றும் தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நேற்று (ஆக. 8)  இந்து தமிழ் இது தொடர்பாக செய்து ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், “கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்புப் பணி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை News 18 Tamilnadu மற்றும் தினத்தந்தி உள்ளிட்ட ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலின் முடிவாக நடிகர் பிரபாஸ் வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக ரூபாய் 32 கோடி வழங்கியதாக வைரலாகும் தகவல் தவறானது. உண்மையில், அவர் ரூபாய் 2 கோடி வழங்கியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Humayun Kabir’s statement on Babri Masjid leads to protest, police action? Here are the facts

Fact Check: താഴെ വീഴുന്ന ആനയും നിര്‍ത്താതെ പോകുന്ന ലോറിയും - വീഡിയോ സത്യമോ?

Fact Check: சென்னையில் அரசு சார்பில் ஹஜ் இல்லம் ஏற்கனவே உள்ளதா? உண்மை அறிக

Fact Check: ಜಪಾನ್‌ನಲ್ಲಿ ಭೀಕರ ಭೂಕಂಪ ಎಂದು ವೈರಲ್ ಆಗುತ್ತಿರುವ ವೀಡಿಯೊದ ಹಿಂದಿನ ಸತ್ಯವೇನು?

Fact Check: బాబ్రీ మసీదు స్థలంలో రాహుల్ గాంధీ, ఓవైసీ కలిసి కనిపించారా? కాదు, వైరల్ చిత్రాలు ఏఐ సృష్టించినవే