வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து என்று வைரலாகும் காணொலி 
Tamil

வெள்ளத்தின் போது கவிழ்ந்து விழுந்த பேருந்து; சமீபத்தில் நடைபெற்ற சம்பவமா?

சென்னை வெள்ளத்தின் போது பேருந்து கவிழ்ந்ததாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Ahamed Ali

“பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்...உபிஸ் - ஒரு சொட்டு கூட தேங்கவில்லை” என்ற கேப்ஷனுடன் பேருந்து ஒன்றின் முன் பகுதி தண்ணீரில் கவிழ்ந்து கிடப்பது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது சமீபத்திய சென்னை வெள்ளத்தில் திமுக ஆட்சியின் போது நடைபெற்றதாக பகிரப்பட்டு வருகிறது.

Fact-check:

இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2018ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி Tamil WhatsApp Status Creator என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி பதிவாகியுள்ளது. அதில், “சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக கவிழ்ந்து விழுந்த பேருந்து” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

பதிவிடப்பட்ட வருடத்தைக் கொண்டு இது பழையது என்பது உறுதியாகிறது. மேலும், 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Conclusion:

நம் தேடலின் முடிவில், சமீபத்திய சென்னை வெள்ளத்தின் போது பேருந்து கவிழ்ந்ததாக வைரலாகும் காணொலி பழையது என்றும் அச்சமயம் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Bihar Bandh leads to fight on streets? No, video is from Maharashtra

Fact Check: വേദിയിലേക്ക് നടക്കുന്നതിനിടെ ഇന്ത്യന്‍ ദേശീയഗാനം കേട്ട് ആദരവോടെ നില്‍ക്കുന്ന റഷ്യന്‍ പ്രസി‍ഡന്റ്? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதற்கு முன்பே பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் என்று வைரலாகும் காணொலி? உண்மை அறிக

Fact Check: ಬಾಂಗ್ಲಾದೇಶದ ಮಸೀದಿಯಲ್ಲಿ ದೇಣಿಗೆ ತೆರೆಯುವ ವೀಡಿಯೊವನ್ನು ಪಂಜಾಬ್ ಪ್ರವಾಹಕ್ಕೆ ಮುಸ್ಲಿಮರು ದೇಣಿಗೆ ನೀಡುತ್ತಿದ್ದಾರೆಂದು ವೈರಲ್

Fact Check: రాహుల్ గాంధీ ఓటర్ అధికార యాత్రను వ్యతిరేకిస్తున్న మహిళ? లేదు, ఇది పాత వీడియో