"குட் பேட் அக்லி" திரைப்படத்தை பார்த்துவிட்டு அபாயகரமான முறையில் ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 
Tamil

Fact Check: “குட் பேட் அக்லி” திரைப்படத்தை பார்த்துவிட்டு அபாயகரமாக ரயிலில் பயணம் செய்தனரா கல்லூரி மாணவர்கள்?

நடிகர் அஜித் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தை பார்த்துவிட்டு சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலில் அபாயகரமாக பயணம் செய்ததாக வைரலாகும் காணொலி

Ahamed Ali

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி நடிகர் அஜித் குமார் நடித்த படம் “குட் பேட் அக்லி”. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், திரைப்படத்தை பார்த்த சென்னை மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் “அஜித்தே… கடவுளே…” என்று கோஷத்தை எழுப்பியவாறு மின்சார ரயிலில் அபாயகரமான முறையில் தொங்கியபடி பயணம் செய்ததாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி எடிட் செய்யப்பட்டது என்றும் இது 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காணொலி என்றும் தெரியவந்தது. 

இதுகுறித்த உண்மை தன்மையை கண்டறிய முதலில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை பார்த்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் ரயிலில் இவ்வாறு பயணம் செய்தனரா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்ததில் அதுதொடர்பான எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது.

தொடர்ந்து, வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2019ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி Yokii என்ற யூடியூப் சேனலில் “Presidency College Train Route Mass Boys Settaigal” என்ற தலைப்பில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில் “அஜித்தே… கடவுளே…” என்ற கோஷமும் இடம்பெறவில்லை. இதன் மூலம் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டு இருப்பது

மேலும், இவ்வாறாக ரயிலில் அபாயகரமான முறையில் பயணம் செய்யும் இந்த காணொலி 'ரூட் தல' விளையாட்டின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது பெரும்பாலும் குறிப்பிட்ட கல்லூரியின் ஆதிக்கத்தை நிரூபிக்க அபாயகரமான ஸ்டண்ட் செய்வது போன்ற ஆபத்தான விளையாட்டாகும். குறிப்பாக நகரும் ரயில் மற்றும் பேருந்துகளில் இவ்வாறான ஸ்டண்டில் ஈடுபடுகின்றனர்.

ரூட் தல குறித்து India Today வெளியிட்டுள்ள செய்தி

Conclusion:

நம் தேடலின் முடிவாக “குட் பேட் அக்லி” திரைப்படத்தை பார்த்துவிட்டு மின்சார ரயிலில் அபாயகரமான முறையில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணித்ததாக வைரலாகும் காணொலி 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் அதற்கும் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்தது.

Fact Check: Bihar Bandh leads to fight on streets? No, video is from Maharashtra

Fact Check: വേദിയിലേക്ക് നടക്കുന്നതിനിടെ ഇന്ത്യന്‍ ദേശീയഗാനം കേട്ട് ആദരവോടെ നില്‍ക്കുന്ന റഷ്യന്‍ പ്രസി‍ഡന്റ്? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: மதிய உணவுத் திட்டத்தை காமராஜருக்கு முன்பே திமுக கொண்டு வந்ததாக பேசினாரா மதிவதனி?

Fact Check: ಭಾರತ-ಪಾಕ್ ಯುದ್ಧವನ್ನು 24 ಗಂಟೆಗಳಲ್ಲಿ ನಿಲ್ಲಿಸುವಂತೆ ರಾಹುಲ್ ಗಾಂಧಿ ಮೋದಿಗೆ ಹೇಳಿದ್ದರೇ?

Fact Check: రాహుల్ గాంధీ ఓటర్ అధికార యాత్రను వ్యతిరేకిస్తున్న మహిళ? లేదు, ఇది పాత వీడియో