வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில், “வெறும் 6 செமீ மழைக்கே நகரம் தாங்கலை ... இதான் திராவிட மாடலா ... 4000 கோடி செலவு பண்ணிங்கன்னு சொல்லும்போது நம்புனமே .. ரோட்ல எப்படி போவாங்க மக்கள் ... நீங்க சொல்ற மாதிரி 40 செமீ மழை பெய்ஞ்சா மக்கள் ஊரையே காலி பண்ணணும் போல ... ஏன் இப்ப தண்ணி நிக்கனும் .. மழைநீர் வடிகால் எங்க .. துணை முதலமைச்சர்.. முதலமைச்சர் எங்க போனாங்க .. ஏன் ஒரு அமைச்சர் கூட இங்க போகலை ... அடுத்த தேர்தல்லை இதை சொல்லி ஓட்டு கேப்பிங்களா” என்ற கேப்ஷனுடன் சாலை முழுவதும் வெள்ள நீர் தேங்கியுள்ள காட்சி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இச்சம்பவம் சென்னையில் நடைபெற்றது போன்று பரப்பி வருகின்றனர்
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐடி பார்க்கில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, IndianTechGuide என்ற எக்ஸ் பக்கத்தில் பெங்களூரில் உள்ள மன்யதா டெக் பார்க் என்று வைரலாகும் அதே காணொலியை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பதிவிடப்பட்டடுள்ளது.
மேலும், நீர்வீழ்ச்சியை போல் காட்சியளித்த பெங்களூர் மன்யதா ஐடி பார்க் என்று OneIndia Kannanda வைரலாகும் அதே காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தொடர்ந்து, மன்யதா டெக் பார்க்கில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, The Economic Times இன்று(அக்டோபர் 17) செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, பெங்களூருவின் உள்கட்டமைப்பு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
கனமழையால் நகரம் முழுவதும் பரவலான வெள்ளம் ஏற்பட்டது, குறிப்பாக மன்யதா டெக் பார்க் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை(அக்டோபர் 14) இரவு முதல் இடைவிடாது பெய்த மழையைத் தொடர்ந்து 300 ஏக்கர் ஐடி மையமான, இப்பகுதியில் உள்ள அலுவலக வளாகங்கள் தண்ணீரில் மூழ்கியது. டெக் பார்க் நீரில் மூழ்கியிருப்பதைக் காட்டும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சென்னையில் பெய்த மழையின் காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் என்று வைரலாகும் காணொலி பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.