யானைத் தலை கொண்ட விநாயகரின் அவதாரம் என்று பிறந்த குழந்தையைக் காண மக்கள் திரண்டுள்ளனர். தீபாவளி அன்று விநாயகரின் உருவம் கொண்ட பெண் குழந்தை பிறந்ததாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இது குறித்த உண்மை தன்மையை கண்டறிய உண்மையில், விநாயகர் உருவத்துடன் குழந்தை பிறந்ததா என்பதை கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2015ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் யானை தும்பிக்கை உருவமைப்புடன் பெண் குழந்தை ஒன்று பிறந்ததாக மெட்ரோ மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், அதில் பெற்றோரின் பெயரோ குழந்தையின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. மேலும், குழந்தையின் முகம் விநாயகரின் முகம் போல் இருப்பதாகக் கூறி அக்கிராமத்தினர் குழந்தையை வழிபட தொடங்கினர். சமீபத்தில் இவ்வாறான எந்த ஒரு நிகழ்வும் பதிவானதாக செய்திகள் வெளியாகவில்லை.
தொடர்ந்து, வைரலான காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலிக்கான சில உருச்சிதைவு இருப்பது தெரியவந்தது. இதனால் Deepware என்ற இணையதளத்தில் பதிவேற்று காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது, வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவைத் தந்தது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் தீபாவளி அன்று விநாயகர் உருவத்துடன் குழந்தை ஒன்று பிறந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.