fifthestatedigital1
Tamil

Fact Check: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இத்தாலி மதுபான விடுதியில் நடனமாடினாரா? உண்மை என்ன

இத்தாலியில் உள்ள மதுபான விடுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடனம் ஆடியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலாகி வருகிறது

Southcheck Network

காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அரசியலுக்கு வருவதற்கு முன்பாக இத்தாலியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நடனக் கலைஞராகப் பணியாற்றினார் என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Fact check:

சவுத் செக்கின் ஆய்வில் ஸ்டாக் புகைப்படத்தை தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.

வைரலாகும் அந்தப் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அதில் "getty images" என்ற லோகோ இடம்பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் அந்த இணையதளத்தில் தேடியபோது, உண்மையான புகைப்படம் கண்டறியப்பட்டது. அந்தத் தரவுகளின்படி, இந்தப் புகைப்படம் 1967 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, அமெரிக்காவின் ஆபர்ன் (Auburn) பகுதியில் உள்ள 'ராசன் ஹோட்டலில்' (Roson Hotel) எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், "I Grew Up in Mortdale 2223" என்ற முகநூல் பக்கத்தில் இது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்தன. 1967 நவம்பர் மாதம் சிட்னியில் மதுபான ஆலைத் தொழிலாளர்கள் நடத்திய 14 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றியில் முடிந்ததைக் கொண்டாட, ஆபர்ன் ஹோட்டலில் 'கோ-கோ' (Go-Go) நடனக் கலைஞர்கள் நடனமாடியபோது எடுக்கப்பட்ட வரலாற்றுப் பதிவே இது.

Conclusion:

நம் தேடலின் முடிவில், பரப்பப்படும் புகைப்படம் 1967ல் அமெரிக்க ஹோட்டல் ஒன்றில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இதற்கும் சோனியா காந்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Fact Check: Nepal floods–Rescue operation saves stranded man? No, video is from Mexico

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: முதல்வர் விஜய் பாணியில் விநாயகர் சிலை செய்யப்பட்டதாகப் பரவும் படம்: உண்மை என்ன?

Fact Check: ನೇಪಾಳದಲ್ಲಿ ಪ್ರವಾಹ ನಂತರ ಮುಸ್ಲಿಮರಿಂದ ಕುರಾನ್ ಪಠಿಸಿ ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡಲಾಗುತ್ತಿದೆಯೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ‘బాంబు పరీక్ష’లో మదర్సా టీచర్, కుటుంబం మృతి? కాదు, వీడియోలో కనిపించింది సిలిండర్ పేలుడు