பட்டிமன்றத்திற்கு குடிபோதையில் வந்த திண்டுக்கல் லியோனி என்று வைரலாகும் நியூஸ் கார்ட் 
Tamil

Fact Check: குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு வந்தாரா திண்டுக்கல் லியோனி?

திண்டுக்கல் லியோனி மலேசியாவில் நடக்கவிருந்த பட்டிமன்றத்திற்கு குடிபோதையில் வந்ததால் மலேசிய தமிழர்களால் விரட்டியடிக்கப்பட்டார் என்று நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Ahamed Ali

“குடிபோதையில் கூட்டத்திற்கு வந்த லியோனி. மலேசியாவில் நடக்கவிருந்த பட்டிமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த திமுக நிர்வாகியும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி குடிபோதையில் கூட்டத்திற்கு வந்ததால் மலேசிய தமிழர்களால் விரட்டியடிப்பு. இது உங்கள் கட்சி கூட்டமல்ல என்று மலேசிய தமிழர்கள் காட்டம்” என்ற தகவலுடன் 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதியிட்ட நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சமீபத்தில் அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய காணொலியுடன் எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் நியூஸ் கார்ட் போலியானது என்று தெரியவந்தது. இத்தகவலின் உண்மைத்தன்மையைக் கண்டறிய இவ்வாறாக உண்மையில் நடைபெற்றதா என்று கூகுளில் கீவர்ட சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, சினிமா விகடன் 2023ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதன்படி, “நான்கு நாள் நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு மலேசியா சென்றிருந்த லியோனி தலைமையிலான குழு, முதல் மூன்று நாட்கள் மூன்று இடங்களில் எவ்விதப் பிரச்னையும் இன்றி நிகழ்ச்சியல நடத்தி முடித்துள்ளனர். நான்காவது நாள் பினாங்கில் நடந்த நிகழ்ச்சியில்தான் இந்த பிரச்சினை. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக லியோனி தலைமையிலான குழு அங்க வராததால் பார்வையாளர்களில் சிலர் கோபத்தில் கூச்சலிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் தமிழ்நாடு வரை பரவ, உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மலேசிய ஊடகங்களை அழைத்து ஒரு விளக்கத்தையும் அளித்தனர். அதாவது, மழை, அதைத் தொடர்ந்து நிகழ்ந்த போக்குவரத்து நெருக்கடி காரணமாகவே நிகழ்ச்சி தாமதமானதாகவும், கூட்டத்தில் ஒரு சிலரே இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் சமூக வலைதளங்களில் 2023ஆம் ஆண்டு மே 3 அன்று இவ்வாறான செய்தி வெளியாகியுள்ளதா என்று தேடுகையில், அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. மேலும், மே 4ஆம் தேதி, இச்செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்று நியூஸ் 7 தமிழ் பதிவிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக, மலேசியாவில் நடக்கவிருந்த பட்டிமன்றத்திற்கு வருகை தந்த திமுக நிர்வாகியும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி குடிபோதையில் வந்ததால் மலேசிய தமிழர்களால் விரட்டியடிக்கப்பட்டார் என்று வைரலாகும் நியூஸ் கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Potholes on Kerala road caught on camera? No, viral image is old

Fact Check: ഇത് റഷ്യയിലുണ്ടായ സുനാമി ദൃശ്യങ്ങളോ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ஏவுகணை ஏவக்கூடிய ட்ரோன் தயாரித்துள்ள இந்தியா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி

Fact Check: ರಷ್ಯಾದಲ್ಲಿ ಸುನಾಮಿ ಅಬ್ಬರಕ್ಕೆ ದಡಕ್ಕೆ ಬಂದು ಬಿದ್ದ ಬಿಳಿ ಡಾಲ್ಫಿನ್? ಇಲ್ಲ, ವಿಡಿಯೋ 2023 ರದ್ದು

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి