Tamil

Fact Check: தனது வாடிக்கையாளர்களுக்கு பரிசு அறிவித்துள்ளதா டி மார்ட்? உண்மை என்ன

பிரபல டி மார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரொக்க பரிசு அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் இணைய லிங்க் கொண்டு வைரல் ஆகி வருகிறது

Southcheck Network

“இந்த கேள்வித்தாளின் மூலம் ₹20,000 மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்..” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் இணைய லிங்க் ஒன்று வைரலாகி வருகிறது.

Fact-Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் ஸ்பேம் என்று தெரியவந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்ய வைரலாகும் இணை லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அப்போது, “இந்த கேள்வித்தாளின் மூலம் ₹20,000 மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.” என்று குறிப்பிட்டு தொடர்ச்சியாக நான்கு கேள்விகள் கேட்கப்படுகிறது அதில், “ஆம்”, “இல்லை” என்ற இரண்டு விருப்பங்களை கிளிக் செய்யும் இடம் இடம்பெற்றுள்ளது.

அதனை கிளிக் செய்தபின் ஒரு பக்கம் திறக்கிறது. அதில், “நீங்கள் வென்றுள்ளீர்கள்! நீங்கள் ₹8000 வென்றுள்ளீர்கள்” என்று குறிப்பிட்டு எங்கள் விளம்பரங்களைப் பற்றி நீங்கள் 5 குழுக்களுக்கோ அல்லது 20 நண்பர்களுக்கோ சொல்ல வேண்டும் என்றும் முகவரியை குறிப்பிட்டால் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் பரிசுகள் டெலிவரி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக ஸ்பேம் இணையதளங்கள் தான் இவ்வாறு தகவலை பலருக்கு அனுப்பக்கூறி இயங்கும், இதன் மூலம் வைரலாகும் இணைய லிங்கும் ஸ்பேம் என்று தெரியவருகிறது.

மேலும், டி மார்ட் நிறுவனம் தனது சமூக வலைதளங்களில், “இலவச DMart பரிசு அட்டைகளை (Gift Cards) வழங்குவதாகக் கூறும் சில இணையதளங்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. இது முற்றிலும் பொய்யானது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் சலுகைகள் அனைத்தும் எங்கள் கடைகள், 'DMart Ready' செயலி மற்றும் எங்கள் இணையதளமான www.dmart.in ஆகியவற்றில் மட்டுமே கிடைக்கும். தயவுசெய்து இது போன்ற இணையதளங்களுக்குப் பலியாகிவிட வேண்டாம். அத்தகைய இணைப்புகளைச் சொடுக்கவோ (Click), அவற்றுடன் எந்தவொரு தகவலையும் பகிர்ந்துகொள்ளவோ ​​வேண்டாம்” என்று தெளிவுபடுத்தி உள்ளது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் டி மார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் மற்றும் இணைய லிங்க் ஸ்பேம் என்று தெரியவந்தது.

Fact Check: Muslims set fire to Hindu neighbourhood in Bangladesh? No, here are the facts

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் நக்கீரன் கோபால் பேசியதாக பரவும் காணொலியின் உண்மை பின்னணி என்ன?

Fact Check: ಬೇಲ್​ನಿಂದ ಹೊರಬಂದ ಬಳಿಕ ಸ್ವತಂತ್ರ ಭಾರದ್ವಾಜ್ ಅಟ್ಟಾಹಸ ಎಂದು ಹಳೆಯ ವಿಡಿಯೊ ವೈರಲ್

Fact Check: బంగ్లాదేశ్‌లో హిందూ ఉపాధ్యాయురాలిపై అత్యాచారం, హత్య చేసిన ముస్లిం వ్యక్తి? కాదు, ఇది స్క్రిప్టెడ్ వీడియో