திமுக ஆட்சியில் இயக்கப்படும் உடைந்த பேருந்து 
Tamil

Fact Check: திமுக ஆட்சியில் பின்புறம் கயிற்றால் கட்டப்பட்ட பேருந்து இயக்கப்படுவதாக வைரலாகும் புகைப்படம் ? உண்மை என்ன?

திமுக ஆட்சியில் உடைந்த பேருந்தின் பின்புறம் கயிற்றால் கட்டப்பட்டு இயக்கப்படுவதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

“எந்தக் கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியில் ஓடும் பஸ்” என்ற கேப்ஷனுடன் உடைந்த பேருந்தின் பின்புறம் கயிற்றால் கட்டப்பட்டது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இப்பேருந்து தற்போதைய திமுக ஆட்சியில் இயங்குவதாக கூறி பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் புகைப்படம் 2018 ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பரவுவது தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் புகைப்படம் 2018ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மீம்ஸாக பதிவிடப்பட்டிருந்தது.

இதே புகைப்படம் namathu என்ற ப்ளாக்ஸ்பாட் இணையதளத்திலும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு வைரலாகும் புகைப்படம் 2018ஆம் ஆண்டு முதல் இணையத்தில் இருப்பதை அறியமுடிகிறது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக திமுக ஆட்சியில் இயங்கும் பேருந்து என்று வைரலாகும் புகைப்படம் 2018ஆம் ஆண்டு முதல் இணையத்தில் இருப்பதை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Manipur’s Churachandpur protests see widespread arson? No, video is old

Fact Check: നേപ്പാള്‍ പ്രക്ഷോഭത്തിനിടെ പ്രധാനമന്ത്രിയ്ക്ക് ക്രൂരമര്‍‍ദനം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: அரசியல், பதவி மோகம் பற்றி வெளிப்படையாக பேசினாரா முதல்வர் ஸ்டாலின்? உண்மை அறிக

Fact Check: ಮೈಸೂರಿನ ಮಾಲ್​ನಲ್ಲಿ ಎಸ್ಕಲೇಟರ್ ಕುಸಿದ ಅನೇಕ ಮಂದಿ ಸಾವು? ಇಲ್ಲ, ಇದು ಎಐ ವೀಡಿಯೊ

Fact Check: నేపాల్‌లో తాత్కాలిక ప్రధానిగా బాలేంద్ర షా? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి