fifthestatedigital1
Tamil

Fact Check: எடப்பாடி பழனிசாமி பிரச்சார வாகனத்தில் திமுக பாடல் ஒலித்ததா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி!

எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவரது பிரச்சார வாகனத்தினுள் இருந்து திமுகவின் தேர்தல் பிரச்சார பாடல் ஒலித்ததாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

Southcheck Network

“அவனே மண்டை காய்ச்சல் லே இருக்கான் இந்த டெக்னிசியன் வேற... Payment கொடுங்கடா” என்ற கேப்ஷேனுடன் சமூக வலைதளங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ளும் காணொலி வைரலாகி வருகிறது. காணொலியில் பிரச்சாரத்தின் இடையே திடீரென்று “ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்..!” என்ற திமுக தேர்தல் பிரச்சார பாடல் அவரது பிரச்சார வாகனத்தில் ஒலிக்கிறது. அதனைக் கேட்ட அவர், “என்னப்பா பாட்டு வருது…” என்று குழம்புவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

Fact Check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

காணொலியின் உண்மை தன்மையை அறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (ஏப்ரல் 07) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் முழுநீளக் காணொலி ‘உரிமைக்குரல்|Urimaikural’ என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருந்தது.

அதன், 10:01 பகுதியில், எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டு இருக்கும்போது திடீரென்று ஒரு இசை அவரது பிரச்சார வாகனத்தினுள் இருந்து வருகிறது. அதற்கு எதிர்மறையாற்றும் அவர், வைரலாகும் காணொலியில் இருப்பது போன்றே “என்னப்பா பாட்டு வருது…” என்று வினவுகிறார். தொடர்ந்து, 10:18ல் அப்பாடல் நிறுத்தப்பட்டு தனது பிரச்சாரத்தை தொடர்கிறார்.

வைரலாகும் காணொலியில் இருப்பது போன்று “ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்..!…” என்ற திமுகவின் பிரச்சார பாடல் ஒலிக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவரது பிரச்சார வாகனத்தில் இருந்து திமுகவின் தேர்தல் பிரச்சார பாடல் ஒலித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.

Fact Check: Nepal floods–Rescue operation saves stranded man? No, video is from Mexico

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: முதல்வர் விஜய் பாணியில் விநாயகர் சிலை செய்யப்பட்டதாகப் பரவும் படம்: உண்மை என்ன?

Fact Check: ನೇಪಾಳದಲ್ಲಿ ಪ್ರವಾಹ ನಂತರ ಮುಸ್ಲಿಮರಿಂದ ಕುರಾನ್ ಪಠಿಸಿ ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡಲಾಗುತ್ತಿದೆಯೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ‘బాంబు పరీక్ష’లో మదర్సా టీచర్, కుటుంబం మృతి? కాదు, వీడియోలో కనిపించింది సిలిండర్ పేలుడు