தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக 35% வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டதாகக் கூறி நியூஸ் கார்டு வடிவிலான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. "தந்தி டிவி கருத்து கணிப்பு" என்ற அடையாளத்துடன் பரப்பப்படும் இந்த அட்டையில் உள்ள வாக்கு சதவீதம் பலராலும் விவாதப் பொருளாக பகிரப்பட்டு வருகிறது.
Fact Check:
தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாக வைரலாகும் தந்தி டிவி பெயரிலான கருத்துக்கணிப்பு குறித்து சவுத்செக் குழுவினர் விரிவான உண்மை சரிபார்ப்பு ஆய்வை மேற்கொண்டனர்.
வைரலாகும் செய்திப் புகைப்படத்தை உற்றுநோக்கியபோது, அதில் இடம்பெற்றுள்ள செய்தித் தொகுப்பாளர்களின் முக அமைப்பில் செயற்கையான மாறுதல்கள் மற்றும் தெளிவற்ற தன்மை காணப்பட்டதுடன், நாம் தமிழர் கட்சியின் சின்னமும் மாற்றப்பட்டு டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
தொடர்ந்து, வைரல் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது, அது கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வெளியான காணொலியுடன் தொடர்புடையது என்பது தெரியவந்தது. கடந்த ஏப்ரல் 18 அன்று யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட தந்தி டிவி திருப்பூர் கருத்துக்கணிப்பு என்ற தலைப்பில் ஒளிபரப்பான உண்மையான காட்சிகள் கண்டறியப்பட்டன.
அந்த காணொலியில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் தனித்தொகுதி குறித்து பேசப்பட்டிருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்கு சதவீதங்கள் தற்போது பரப்பப்படும் வைரல் அட்டையில் உள்ள புள்ளிவிவரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தன. சமூக வலைதளங்களில் இதுபோன்று போலியாக உருவாக்கப்படும் தகவல்களைச் சரிபார்க்க [தந்தி டிவி அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் மூலமும் சோதித்ததில், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு 35% வாக்குகள் என தந்தி டிவி எந்தவொரு புதிய கருத்துக்கணிப்பையும் வெளியிடவில்லை என்பதும், பழைய சட்டமன்றத் தேர்தல் காணொலியின் திரைப் புகைப்படத்தை மர்ம நபர்கள் எடிட் செய்து திரித்து வெளியிட்டுள்ளனர் என்பதும் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது.
Conclusion:
தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக 35% வாக்குகளுடன் வெற்றி பெறும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவும் செய்திப் புகைப்படம் பழைய மற்றும் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாகத் தெளிவாகியுள்ளது.