Tamil

Fact Check: ராஜ்நாத் சிங் காலில் விழுந்த திரௌபதி முர்மு? உண்மை என்ன

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விழுந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Southcheck Network

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் விழுந்து வணங்கியதாக கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது

வைரலாகும் பதிவு

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, prokerala.com என்ற ஊடகத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பரவி வரும் காணொலியில் உள்ள புகைப்படம் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.

The Hindu வெளியிட்டுள்ள செய்தி

அதே போல் The Hindu ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தியில். புது டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலும், பரவி வரும் காணொலியில் உள்ள அதே புகைப்படம் இடம்பெற்றிருந்தது. எனவே, பரவி வருவது  "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பது தெளிவானது. 

இதையடுத்து வைரலாகும் காணொலியை DeepFake-O-Meter என்ற இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில், ஐந்து டிடெக்டர்கள் 92% முதல் 99.9% என்ற முடிவைத் தந்தன. மேலும், இதன் மூலம் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

AI ஆய்வு முடிவு

Conclusion:

முடிவாக நம் தேடலில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் விழுந்ததாக வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

Fact Check: Hindu temple attacked in Bangladesh? No, claim is false

Fact Check: തദ്ദേശ തിരഞ്ഞെടുപ്പില്‍ ഇസ്‍ലാമിക മുദ്രാവാക്യവുമായി യുഡിഎഫ് പിന്തുണയോടെ വെല്‍ഫെയര്‍ പാര്‍ട്ടി സ്ഥാനാര്‍ത്ഥി? പോസ്റ്ററിന്റെ വാസ്തവം

Fact Check: ಒಡಿಶಾದಲ್ಲಿ ಅದಿವಾಸಿಗಳಿಂದ ಮತಾಂತರದ ವಿರುದ್ದ ಪ್ರತಿಭಟನೆ ನಡೆಯಿತೇ? ಇಲ್ಲ, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: బంగ్లాదేశ్‌లో హిజాబ్ ధరించనందుకు క్రైస్తవ గిరిజన మహిళపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి

Fact Check: கன்னடம் பேசிய வாடிக்கையாளரை இந்தி பேசச் சொன்னாரா வங்கி ஊழியர்? உண்மை என்ன