வைரலாகும் எடப்பாடி பழனிச்சாமியின் எக்ஸ் பதிவு 
Tamil

பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தை "நன்னாள்" என்று குறிப்பிட்டாரா எடப்பாடி பழனிச்சாமி?

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 2001ஆம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தை "நன்னாள்" என்று குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுவிட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Ahamed Ali

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி இந்திய பாராளுமன்றத்தினுள் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் நினைவு நாளான நேற்று முன்தினம் (டிசம்பர் 13) மீண்டும் பாராளுமன்ற வளாகத்திற்குள் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், “இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இந்நன்னாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது” என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத் தாக்குதலை “நல்ல நாள்” என்று பழனிச்சாமி குறிப்பிடுகிறார் என்று கூறி பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் பதிவு

Fact-check:

இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் எடப்பாடி பழனிச்சாமியின் எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, கடந்த டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது  வேதனைக்குரியது.

இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.” என்று பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலக எக்ஸ் கணக்கை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதில், “இந்நன்னாளில்” என்ற வார்த்தை எங்கும் இடம்பெறவில்லை. மேலும், பதிவு தவறாக இடப்பட்டு எட்டி செய்யப்பட்டிருந்தால் எக்ஸ் பக்கத்தில் “Last edited” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறும் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் பதிவு தவறாக இடப்பட்டு திருத்தப்பட்டவில்லை என்று உறுதியாகிறது.


தொடர்ந்து, தவறாக பதிவிட்டுவிட்டு டெலீட் செய்துள்ளனரா என்பதை அறிய, Googe Cached View மற்றும் Wayback Machine உதவியுடன் எடப்பாடி பழனிச்சாமியின் எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, Wayback Machineல் டிசம்பர் மாதம் எந்தவொரு பதிவும் சேகரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், Google Cache View உதவியுடன் ஆய்வு செய்ததில், டிசம்பர் 13ம் தேதி எந்த பதிவும் டெலீட் செய்யப்படவில்லை என்பதும் உறுதியாகிறது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் எடப்பாடி பழனிச்சாமியின் பதிவிட்ட எக்ஸ் பதிவில் உள்ள கடந்த “இதே நாளில்” என்ற வார்த்தையை “இந்நன்னாளில்” என்று எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்று நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Rohingya Muslims taking over jobs in India? No, weaver’s video is from Bangladesh

Fact Check: രാഹുല്‍ ഗാന്ധിയുടെ വോട്ട് അധികാര്‍ യാത്രയില്‍ ജനത്തിരക്കെന്നും ആളില്ലെന്നും പ്രചാരണം - ദൃശ്യങ്ങളുടെ സത്യമറിയാം

Fact Check: நடிகர் ரஜினி தவெக மதுரை மாநாடு குறித்து கருத்து தெரிவித்ததாக பரவும் காணொலி? உண்மை என்ன

Fact Check: ಮತ ಕಳ್ಳತನ ವಿರುದ್ಧದ ರ್ಯಾಲಿಯಲ್ಲಿ ಶಾಲಾ ಮಕ್ಕಳಿಂದ ಬಿಜೆಪಿ ಜಿಂದಾಬಾದ್ ಘೋಷಣೆ?

Fact Check: రాహుల్ గాంధీ ఓటర్ అధికార యాత్రను వ్యతిరేకిస్తున్న మహిళ? లేదు, ఇది పాత వీడియో