Tamil

Fact Check: எழும்பூர் திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டதாக பரவும் புகைப்படம் உண்மையா?

எழும்பூர் தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா தனது நெற்றியில் திருநீர் பூசிக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

Southcheck Network

“திராவிட மண்ணில் திருநீர் பூசிக் கொண்ட கிறிஸ்தவன்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், எழும்பூர் (தனி) தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் தமிழன் பிரசன்னாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், அவர் தனது நெற்றியில் பட்டையிட்டுக் கொண்டது போன்று தெரிகிறது. எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் இவர் ஒரு கிறிஸ்தவர் என்றும் இவர் அங்க போட்டியிட தகுதியற்றவர் என்றும் வலதுசாரியினர் கூறி வரும் நிலையில் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

Fact Check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது. 

முதலில் தமிழன் பிரசன்னா இவ்வாறு தனது நெற்றியில் திருநீர் பூசிக்கொண்டாரா என்பதை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அதில், “உடலும்,கண்களும் கடும் உறக்கம் கேட்கின்றது… தலைவர் இட்ட கட்டளை  உள்ளத்தில் தகிக்கின்றது…” என்று குறிப்பிட்டுள்ளார். அதில், வைரலாகும் அதே புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆனால், அதில் அவரது நெற்றியில் திருநீர் இடப்படவில்லை. இதன் மூலம் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

தொடர்ந்து, அதனை உறுதிப்படுத்தும் வகையில் வைரலாகும் புகைப்படத்தை Foto Forensic முறையில் ஆய்வு செய்து பார்த்தோம், அப்போது அவரது நெற்றிப் பகுதியில் இருக்கக்கூடிய திருநீர் எடிட் செய்யப்பட்டு இருப்பதற்கான முடிவுகள் நமக்கு கிடைத்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக எழும்பூர் தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா தனது நெற்றியில் திருநீர் பூசிக்கொண்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.

Fact Check: Muslims set fire to Hindu neighbourhood in Bangladesh? No, here are the facts

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் நக்கீரன் கோபால் பேசியதாக பரவும் காணொலியின் உண்மை பின்னணி என்ன?

Fact Check: ಬೇಲ್​ನಿಂದ ಹೊರಬಂದ ಬಳಿಕ ಸ್ವತಂತ್ರ ಭಾರದ್ವಾಜ್ ಅಟ್ಟಾಹಸ ಎಂದು ಹಳೆಯ ವಿಡಿಯೊ ವೈರಲ್

Fact Check: బంగ్లాదేశ్‌లో హిందూ ఉపాధ్యాయురాలిపై అత్యాచారం, హత్య చేసిన ముస్లిం వ్యక్తి? కాదు, ఇది స్క్రిప్టెడ్ వీడియో