Tamil

Fact Check: கரூர் வெங்கமேட்டில் திமுக சார்பில் தேர்தல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதா?

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வாக்காளர்களைக் கவரும் வகையில் திமுக சார்பில் சிறப்புப் பரிசுப் பெட்டிகள் வழங்கப்படுவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது

Southcheck Network

தற்போது நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, கரூர் வெங்கமேடு பகுதியில் வாக்காளர்களுக்கு திமுக சார்பில் மிக்ஸி, கிரைண்டர் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய சிறப்புப் பரிசுத் தொகுப்புகள் விநியோகம் செய்யப்படுவதாகப் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Fact-Check:

சவுத்செக்கின் ஆய்வில் இது 2025ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியால் தனது தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட தீபாவளிப் பரிசுத் தொகுப்பு என்று தெரியவந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது செந்தில் பாலாஜியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வைரலாகும் காணொலியில் உள்ள அதே பரிசுத் தொகுப்புடன் ஒரு செய்தி இடம்பெற்றிருந்தது.

அதில், கரூர், கொடங்கிப்பட்டியில் நடைபெற்ற சிறப்பு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்ததாக பதிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து தேடுகையில் Dmk Thiruvarur என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி, “தீபாவளி திருநாளை முன்னிட்டு, கரூர் சொந்தங்களுக்கு அன்பு பரிசு வழங்கினார் செந்தில் பாலாஜி அவர்கள்” என்று குறிப்பிட்டு வைரலாகும் அதே பரிசுத்தொகுப்பின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

​Conclusion:

நம் தேடலில் முடிவாக, கரூரில் தேர்தலில் வெற்றிப் பெற திமுக சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதாக பரவும் செய்தி தவறானவை. உண்மையில் அது 2025ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பரிசு வழங்கிய தொகுப்பாகும்.

Fact Check: Video shows Ukraine’s recent strike on Russia’s Kuibyshev oil refinery? No, here are the facts

Fact Check: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്രമോദിയുടെ 76-ാം ജന്മദിനത്തില്‍ ബുര്‍ജ് ഖലീഫയില്‍ ആശംസ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: இரு கைகளும் இல்லாத பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் வைரல் காணொலி உண்மையா?

Fact Check: ದೆಹಲಿಯಲ್ಲಿ ಮಳೆಯ ನಡುವೆಯೂ ಮುಖ್ಯ ಚುನಾವಣಾ ಆಯುಕ್ತರ ವಿರುದ್ಧ ಪ್ರತಿಭಟನೆ? ಇಲ್ಲ, ಇದು ಹಳೆಯ ವಿಡಿಯೊ

Fact Check: ఢిల్లీలో సీఈసీ జ్ఞానేశ్ కుమార్‌కు వ్యతిరేకంగా నిరసనా? కాదు, పాత వీడియో వైరల్