Tamil

Fact Check: 'விஜய் அலை' என Frontline இதழ் அட்டைப்படம் வெளியிட்டதா? வைரலாகும் படத்தின் பின்னணி என்ன

‘விஜய் அலை’ வீசுவதாக 'Frontline' இதழ் அட்டைப்படம் வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

Southcheck Network

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக “விஜய் அலை” என்று ஒன்று தமிழகத்தில் உருவாக்குவதாக Frontline ஊடகம் அட்டைப்படம்  வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் போலியானது என்றும் அவ்வாறான எந்த ஒரு செய்தியும் வெளியிடப்படவில்லை என்றும் தெரியவந்தது. 

வைரலாகும் புகைப்படத்தின் உண்மை தன்மையேறிய அவ்வாறான தலைப்பில் பிரண்ட் லைன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதா என்று கூகுளில் கீவர்ட்ஸ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அவ்வாறான எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது.

தொடர்ந்து, Frontline ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தேடியபோது, நேற்று (ஏப்ரல் 22) இதுதொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, “இந்த அட்டைப்படம் போலியானது; இது Frontline இதழால் வெளியிடப்பட்டதல்ல. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களால் இது இணையத்தில் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. தவறான தகவல்களைப் பகிர்வதற்கு முன், தயவுசெய்து அவற்றின் மூலங்களைச் சரிபார்க்கவும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலில் முடிவாக “விஜய் அலை” தமிழகத்தில் வீசுவதாக Frontline ஊடகம் அட்டைப்படம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் அட்டைப்படம் போலியானது என்றும் உண்மையில் அவ்வாறான எந்த ஒரு அட்டைப்படத்தையும் அவ்வூடகம் வெளியிடவில்லை என்றும் தெரியவந்தது.

Fact Check: Video shows Ukraine’s recent strike on Russia’s Kuibyshev oil refinery? No, here are the facts

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: இரு கைகளும் இல்லாத பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் வைரல் காணொலி உண்மையா?

Fact Check: ದೆಹಲಿಯಲ್ಲಿ ಮಳೆಯ ನಡುವೆಯೂ ಮುಖ್ಯ ಚುನಾವಣಾ ಆಯುಕ್ತರ ವಿರುದ್ಧ ಪ್ರತಿಭಟನೆ? ಇಲ್ಲ, ಇದು ಹಳೆಯ ವಿಡಿಯೊ

Fact Check: ఢిల్లీలో సీఈసీ జ్ఞానేశ్ కుమార్‌కు వ్యతిరేకంగా నిరసనా? కాదు, పాత వీడియో వైరల్