லட்சுமி வெடி வைத்து இந்துக் கடவுளை அவமதித்த எச் ராஜா 
Tamil

Fact Check: லட்சுமி வெடி வைத்தாரா பாஜக நிர்வாகி எச். ராஜா? உண்மை அறிக

பாஜக நிர்வாகி எச். ராஜா இந்துமத தெய்வத்தை அவமதிக்கும் விதமாக தீபாவளிக்கு லட்சுமி வெடி வைத்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலாகி வருகிறது

Southcheck Network

இந்து மத பெண் தெய்வமான லட்சுமியை அவமதிக்கும் விதமாக பாஜாகாவின் எச்.ராஜா தீபாவளி அன்று லட்சுமி வெடி வைத்ததாக சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact Check:

சவுத் செக்கின் ஆய்வில் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.

வைரலாகும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, பாஜகவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வைரலாகும்‌ அதே புகைப்படம் நேற்று (அக்டோபர் 20) வெளியிடப்பட்டிருந்தது. அதில், பாஜக நிர்வாகி எச். ராஜா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அப்புகைப்படத்தில் லட்சுமி வெடி இடம்பெறவில்லை.

தொடர்ந்து தேடுகையில் இதே பதிவை எச். ராஜா தனது எச். ராஜா  நேற்று (அக்டோபர் 20) வைரலாகும் அதே புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “உலகெங்கும் வாழும் சனாதன உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்..!!அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மத்தாப்பு ஒளியின் பிரகாசம் போல் எந்நாளும் மகிழ்ச்சி நிறைந்திருக்க இந்நன்நாளில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிலும் அவர் லட்சுமி வெடியை வெடிக்கவில்லை என்று தெரியவந்தது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் பாஜக தலைவர் எச். ராஜா லட்சுமி வெடி வெடிப்பது போன்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.

Fact Check: Hindu temple attacked in Bangladesh? No, claim is false

Fact Check: തദ്ദേശ തിരഞ്ഞെടുപ്പില്‍ ഇസ്‍ലാമിക മുദ്രാവാക്യവുമായി യുഡിഎഫ് പിന്തുണയോടെ വെല്‍ഫെയര്‍ പാര്‍ട്ടി സ്ഥാനാര്‍ത്ഥി? പോസ്റ്ററിന്റെ വാസ്തവം

Fact Check: ராஜ்நாத் சிங் காலில் விழுந்த திரௌபதி முர்மு? உண்மை என்ன

Fact Check: ಬಿರಿಯಾನಿಗೆ ಕೊಳಚೆ ನೀರು ಬೆರೆಸಿದ ಮುಸ್ಲಿಂ ವ್ಯಕ್ತಿ?, ವೈರಲ್ ವೀಡಿಯೊದ ಸತ್ಯಾಂಶ ಇಲ್ಲಿದೆ

Fact Check: బంగ్లాదేశ్‌లో హిజాబ్ ధరించనందుకు క్రైస్తవ గిరిజన మహిళపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి