Tamil

Fact Check: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா? வைரலாகும் தகவல் உண்மையா

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிகபட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

Southcheck Network

"தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! 10.05.2026 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்!" என்ற தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Fact check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலான தகவல் தவறானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பது தமிழ்நாடு சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடையும் நாள் என்று தெரிய வந்தது.

வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை அறிய முதலில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளதா என்பதை கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலின் தேதியை அறிவிக்கவில்லை என்பது தெரிய வந்தது. மாறாக தேர்தலையொட்டி அரசு அதிகாரிகள் பணிமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அதற்கான உத்தரவு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரலாகும் தகவலில் இருக்கக்கூடிய அதே பகுதி அந்த உத்தரவிலும் இணைக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்தபோது தமிழ்நாடு ,கேரளா ,அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி போன்ற  மாநிலங்களில் சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடையும் நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாடு சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடையும் நாள் 2026 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக க தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும், வைரலாகும் தகவலில் இருக்கும் தேதி தமிழ்நாட்டு சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடையும் தேதி என்று தெரியவந்தது.

Fact Check: Viral video shows collapse of Satya Niketan PG hostel? No, it is from Karawal Nagar

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: முதல்வர் விஜய் பாணியில் விநாயகர் சிலை செய்யப்பட்டதாகப் பரவும் படம்: உண்மை என்ன?

Fact Check: ನೇಪಾಳದಲ್ಲಿ ಪ್ರವಾಹ ನಂತರ ಮುಸ್ಲಿಮರಿಂದ ಕುರಾನ್ ಪಠಿಸಿ ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡಲಾಗುತ್ತಿದೆಯೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ‘బాంబు పరీక్ష’లో మదర్సా టీచర్, కుటుంబం మృతి? కాదు, వీడియోలో కనిపించింది సిలిండర్ పేలుడు