சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீடு விதிமீறல் என்று வைரலாகும் தகவல் 
Tamil

Fact Check: ஐஐடி ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு விதிமீறல் என்று வைரலாகும் தகவல்; உண்மை என்ன?

சென்னை ஐஐடி ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு விதிமீறல் நடைபெற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

“ரிசர்வேசன்னு ஒன்னு இல்லைனா நம்ம MBC, BC, SC, ST நிலைமை. எப்பா ஆண்ட பரம்பரை வா வந்து OC கிட்ட சண்ட போடு இடஒதிக்கீட்ட அழிக்கனும்னு கம்பு சுத்துவியே இடஒதிக்கீடு இருக்கும்போதே (BC, OBC SC ST) எடத்த ஒருத்தன் எடுத்துட்டு போறான் இட ஒதுக்கீடுலாம் இல்லனா நீ திருஓடுதான் டீ‌‌. அது ஐஐடி இல்ல...அக்ரஹாரம்” என்ற கேப்ஷனுடன் சென்னை ஐஐடியின் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு விதிமீறல் நடைபெற்று இருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் தகவல்

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் பழையது என்று தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய வைரலாகும் தகவல் தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2019ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி The New Indian Express செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “சென்னை ஐஐடியில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் 12.4% பேர் மட்டுமே இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டவர்களில் 684 பேர்களில் 599 பேர் பொது பிரிவினைச் சேர்ந்தவர்கள். சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரும், ஆர்வலருமான முரளிதரன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பி இருந்த கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், 2014 முதல் தற்பொழுது வரை உள்ள பணி நியமனம் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டன.

அதன்படி, காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஓ.பி.சி பிரிவில் 66 பேர், எஸ்.சி பிரிவில் 16 பேர், எஸ்.டி பிரிவில் 3 பேர் மட்டுமே உள்ளனர். 2019-ல் வேலைக்காக விண்ணப்பித்த(எஸ்.டி, எஸ்.சி. ஓ.பி.சி பிரிவு) 271 பேரில் 5 பேர் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டு 2 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு இது போன்ற விதிமீறல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. வைரலாகும் செய்தியை அதே தேதியில் புதிய தலைமுறை ஊடகமும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் இது போன்ற விதிமீறல்கள் சென்னை ஐஐடியில் நடைபெற்றதா என்று கூகுளில் தேடுகையில், 2021ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு விதிமீறல் நடைபெற்று இருப்பதாக The Hindu 2022ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதன் பிறகு அவ்வாறாக இந்த ஒரு விதிமீறல்களும் நடைபெற்றதாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.

Conclusion:

நம் தேடலில் முடிவாக சென்னை ஐஐடி ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு விதிமீறல் என்று வைரலாகும் தகவல் 2019ஆம் ஆண்டு வெளியான பழைய தகவல் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Potholes on Kerala road caught on camera? No, viral image is old

Fact Check: ഇത് റഷ്യയിലുണ്ടായ സുനാമി ദൃശ്യങ്ങളോ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ஏவுகணை ஏவக்கூடிய ட்ரோன் தயாரித்துள்ள இந்தியா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி

Fact Check: ರಷ್ಯಾದಲ್ಲಿ ಸುನಾಮಿ ಅಬ್ಬರಕ್ಕೆ ದಡಕ್ಕೆ ಬಂದು ಬಿದ್ದ ಬಿಳಿ ಡಾಲ್ಫಿನ್? ಇಲ್ಲ, ವಿಡಿಯೋ 2023 ರದ್ದು

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి