தமிழ்நாட்டில் உள்ள சாலை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இருக்கும் சாலையில் இரு முனைகளில் மட்டுமே தார் சாலை போடப்பட்டுள்ளது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படத்தில் உள்ள சாலை பல்கேரியாவில் போடப்பட்டது என்று தெரியவந்தது. இது உண்மையில் தமிழ்நாட்டில் போடப்பட்ட சாலைதானா என்று கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பல்வேறு பல்கேரிய மொழி ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தன. அதன்படி, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி btvnovinite என்ற ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், “பல்கேரியாவின் Dragalevtsi என்ற பகுதியில் உள்ள Nenko Balkanski தெருவில் உள்ள சாலையில் இரு முனைகளில் மட்டுமே தார் சாலை போடப்பட்டுள்ளது. இரு பணியாளர்கள் ரயில் தண்டவாளத்தைப் போன்று சாலை அமைத்துச் சென்றனர் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. இச்செய்தியை அடிப்படையாகக்கொண்டு அதே தேதியில் lupa, frognews உள்ளிட்ட ஊடகங்களும் பல்கேரிய மொழியில் இதே செய்தியை வெளியிட்டுள்ளன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தமிழ்நாட்டில் உள்ள சாலையில் இரு முனைகளில் மட்டுமே தார் சாலை போடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தில் உண்மை இல்லை என்றும் அது உண்மையில் பல்கேரிய நாட்டில் போடப்பட்டுள்ள சாலை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.