இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்தியர்கள் தூக்கிலிடப்பட்டனர் 
Tamil

Fact Check: இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்தியர்கள் ஈரானில் தூக்கிலிடப்பட்டனரா? உண்மை அறிக

இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்த இந்தியர்கள் ஈரானில் தூக்கிலிடப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

Ahamed Ali

“ஈரானில் இஸ்ரேலின் மொசாத்திற்க்காத உளவு பார்த்த பல நாடுகளை சேர்ந்த பலருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்திய இளைஞர்கள் இவர்கள் மனதில் ஏற்கனவே இருக்கும் இஸ்லாத்தின் மீதான தவறான கருத்தை மொசாத் அழகாக பயன்படுத்தி தற்போது இவர்களை பலியாடுகளாக ஆக்கி இருக்கின்றது. இவர்களும் வேலைக்குச் சென்ற இடத்தில் அதிக பணத்திற்காக அந்த நாட்டுக்கு துரோகிகளாக மாறி இருக்கின்றனர் தற்போது உயிரே போய்விட்டது இனி பல நாடுகளும் இந்தியர்களை மதிக்குமா?

இஸ்ரேல் தனது நாட்டு மக்களை அதாவது யூதர்களை உளவு பார்க்க செய்வதில்லை காரணம் சிக்கினால் தூக்கு தண்டனை கிடைக்கும் என்பதால் மற்ற நாட்டினரை தான் பயன்படுத்துவார்கள். இதே போன்று கத்தாரில் சில ஆண்டுகளுக்கு முன்பு உளவு பார்த்த 3 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது பிறகு இந்தியா போராடியதால் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது” என்ற தகவலுடன் நபர் ஒருவர் தூக்கிலிடப்படும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி "பாடிலெஸ்" என்ற ஈரானிய திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

முதலில், மொசாத் உளவு அமைப்பு இந்தியர்களை உளவாளிகளாக பயன்படுத்தியதா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ செய்தியோ வெளியாகவில்லை என்று தெரியவந்தது. 

வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Alireza Donyadide என்ற யூடியூப் சேனலில் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி “Hanging the actor backstage” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், “திரைக்குப் பின்னால் உள்ள ஸ்டண்ட் டிசைனர்: அலிரேசா டோன்யாடிட்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலி திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.

தொடர்ந்து தேடுகையில் தன்னை ஒரு ஸ்டண்ட் கலைஞர் என்று குறிப்பிட்டுள்ள alidonya021 என்ற இன்ஸ்டாகிராம் பயனர் கடந்த ஜனவரி 2ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டிருந்தார். அதிலும், “பாடிலெஸ் (Bodiless) திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திரைப்படத்தை யூடியூபில் சர்ச் செய்து பார்த்தபோது Televika என்ற யூடியூப் சேனலில் இத்திரைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. அதன் 4:49 முதல் 6:10 வரையிலான பகுதியில் வைரலாகும் காணொலியில் இருப்பது போன்று ஒருவர் தூக்கிலிடப்படும் காட்சி இடம் பெற்று இருப்பதை நம்மால் காண முடிகிறது.

Conclusion:

முடிவாக, “பாடிலெஸ்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தூக்குக் காட்சியை இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்த இந்தியர்கள் தூக்கிலிடப்படுவதாக தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Kavin Selva Ganesh’s murder video goes viral? No, here are the facts

Fact Check: രക്ഷാബന്ധന്‍ സമ്മാനമായി സൗജന്യ റീച്ചാര്‍ജ്? പ്രചരിക്കുന്ന വാട്സാപ്പ് സന്ദേശത്തിന്റെ വാസ്തവം

Fact Check: வைரலாகும் மேக வெடிப்பு காட்சி? வானிலிருந்து கொட்டிய பெருமழை உண்மை தானா

Fact Check: ರಾಮ ಮತ್ತು ಹನುಮಂತನ ವಿಗ್ರಹಕ್ಕೆ ಹಾನಿ ಮಾಡುತ್ತಿರುವವರು ಮುಸ್ಲಿಮರಲ್ಲ, ಇಲ್ಲಿದೆ ಸತ್ಯ

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి