fifthestatedigital1
Tamil

Fact Check: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலம் பெற்று வீடு திரும்பியதாகப் பரவும் செய்தி? உண்மை என்ன

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை முடித்து நல்லபடியாக வீடு திரும்பிவிட்டார் என்று சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது

Southcheck Network

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் முழுமையாக உடல்நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக ஒரு புகைப்படம் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. முகநூல் போன்ற தளங்களில் அவருக்கு சிலர் சால்வை அணிவிக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, அவர் நலமுடன் வீடு திரும்பிவிட்டார் என பலர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Fact Check:

சவுத் செக் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்று தெரியவந்தது.

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வி.எஸ்.பாபு அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று காரணமாக ஐசியூ பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அவர் தற்போது வீடு திரும்பியதாகப் பகிரப்படும் தகவல் முற்றிலும் போலியானது என்பது கண்டறியப்பட்டது.

இதற்கு முதல் ஆதாரமாக, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளார் என்றும், மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், அவர் வீடு திரும்பியதாகக் கூறப்படும் தகவலை அமைச்சர் மறுத்துள்ளதை தினத்தந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு உறுதிப்படுத்துகிறது. அத்துடன், தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் எனவும் வந்துள்ள சமயம் தமிழ் தளத்தின் விரிவான செய்தியும் இதை மேலும் மெய்ப்பிக்கிறது.

இந்த மூன்று வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், வி.எஸ்.பாபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதும், இது முற்றிலும் தவறான தகவல் என்பதும் தெளிவாகிறது.

Conclusion:

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் போலியானது என்பதை சவுத் செக் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Fact Check: Tripura BSF attack–Video shows police action against accused? No, video is from Bangladesh

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ಬಿಜೆಪಿ ಸರ್ಕಾರ ಇರುವ ಬಿಹಾರದಲ್ಲಿ ಯುವತಿಯ ಅಪಹರಣ? ಇಲ್ಲ, ಇದು ಸ್ಕ್ರಿಪ್ಟ್ ಮಾಡಿದ ವಿಡಿಯೊ

Fact Check: భారత స్వదేశీ బుల్లెట్ రైలు వీడియో? కాదు, ఇది తైవాన్‌కు చెందినది

Fact Check: PayTM தீபாவளியையொட்டி ரூபாய் 1,000 தருவதாகப் பரவும் லிங்க? உண்மை என்ன