ஸ்ரீபெரும்புதூர் சாலையில் நடைபெறும் நீளம் தாண்டுதல் போட்டி 
Tamil

Fact Check: சாலைகளில் நடைபெறும் நீளம் தாண்டுதல் போட்டி; தமிழ்நாட்டில் நடைபெற்றதா?

Ahamed Ali

“திருப்பெரும்பூதூரின் (ஸ்ரீபெரும்புதூர்) சாலைகள் Long Jump போட்டிக்குத் தயார்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சாலையில் உள்ள பள்ளத்தில் நீளம் தாண்டுதல் போட்டி நடத்தப்படுகிறது. இறந்தவர்களைப் போன்று உடையணிந்தவர்கள் அந்த பள்ளத்தை தாண்டவே எமதர்மன் போல் வேடமிட்டவர்கள் தாண்டிய தூரத்தை அளக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர்.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இச்சம்பவம் கர்நாடகாவில் நடைபெற்றது என்று தெரியவந்தது‌. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி News 18 ஊடகம் இதுகுறித்து செய்தி வெளியிட்டிருந்தது.

நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தி

அதில், “பருவமழையின் போது சாலையில் ஏற்படும் பள்ளத்தின் அபாயம் குறித்து கவனத்தை ஈர்க்கும் முயற்சியில், கர்நாடகாவின் உடுப்பியில் சமூக ஆர்வலர்கள் குழு ஒன்று ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது.

வைரலாகி வரும் காணொலியில், எமதர்மன் மற்றும் சித்ரகுப்தன் போன்ற உடையணிந்த நபர்கள், இறந்தவர்களைப் போல உடையணிந்த சிலருடன் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்பதைக் காட்டுகிறது. Adi Udupi - Malpe வீதியில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை வைரலாகும் காணொலியுடன் Zee News, NDTV உள்ளிட்ட ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலின் முடிவாக ஸ்ரீபெரும்புதூர் சாலையில் நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்றதாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் அது கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற நிகழ்வு என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: CGI video falsely shared as real footage of Hurricane Milton

Fact Check: തിരുവോണം ബംപര്‍ ലോട്ടറിയടിച്ചത് കോഴിക്കോട് സ്വദേശിക്കോ?

ఫ్యాక్ట్ చెక్: హైదరాబాద్‌లోని దుర్గా విగ్రహం ధ్వంసమైన ఘటనను మతపరమైన కోణంతో ప్రచారం చేస్తున్నారు

Fact Check: ಹೈದರಾಬಾದ್​ನಲ್ಲಿ ಮುಸ್ಲಿಮರು ದುರ್ಗಾ ದೇವಿಯ ಮೂರ್ತಿಯನ್ನು ಧ್ವಂಸ ಮಾಡಿದ್ದು ನಿಜವೇ?

Fact Check: Old video of Congress MP Deepender Hooda in tears falsely linked to 2024 Haryana poll results