மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் பாலஸ்தீனியர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் 
Tamil

Fact Check: மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் பாலஸ்தீனியர்களை அந்நாட்டுப் பிரதமர் நேரில் சென்று சந்தித்தாரா?

Ahamed Ali

“காஸாவிலிருந்து கப்பல் மூலம் மலேசியா வந்துள்ள காயமுற்றோருக்கு  மலேசிய அரசு சிறந்தமுறையில் சிகிச்சை அளித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அரபியில் பேசி ஆறுதல் கூறும் நெகிழ்வான காட்ச” என்ற கேப்ஷனுடன் நபர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவிக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இவர் மலேசிய பிரதமர் இல்லை என்பது தெரிய வந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி bckupacc99 என்ற எக்ஸ் பக்கம் வைரலாகும் காணொலி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள Tuanku Mizan ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலஸ்தீனியர்களை Dato Setia Dr. Naim நேரில் சந்தித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலைக்கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது Buzzkini என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக புகைப்படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “தற்போது 127 பாலஸ்தீனியர்கள் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர், அவர்களில் 41 பேர் காயமடைந்து இந்த நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மலேசிய பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்), டத்தோ டாக்டர் முகமது நயிம் மொக்தார் சிகிச்சை பெற்று வரும் பாலஸ்தீன மக்களை பார்வையிட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலியில் இருப்பது மலேசிய மத விவகாரங்கள் துறையின் அமைச்சர் என்பது தெரிய வந்தது.

இருவருக்கும் உள்ள வேறுபாடுகள்

தொடர்ந்து, இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக datosetia_dr.naim என்ற அமைச்சரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் காணொலி வெளியிடப்பட்டுள்ளது. அப்பதிவில் சிகிச்சை பெற்றவர்களை சந்திக்க அமைச்சர் உடன் வந்தவர்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், பிரதமரின் பெயர் இடம் பெறவில்லை.

Conclusion:

நம் தேடலின் முடிவாக மலேசிய பிரதமர் அந்நாட்டில் சிகிச்சை பெற்று வரும் பாலஸ்தீனியர்களை நேரில் சென்று சந்தித்ததாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அந்நாட்டு மத விவகாரங்கள் துறை அமைச்சர் முகமது நயிம் மொக்தார் நேரில் சென்று சந்தித்தார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Man assaulting woman in viral video is not Pakistani immigrant from New York

Fact Check: സീതാറാം യെച്ചൂരിയുടെ മരണവാര്‍ത്ത ദേശാഭിമാനി അവഗണിച്ചോ?

Fact Check: மறைந்த சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வணக்கம் செலுத்தினரா?

ఫ్యాక్ట్ చెక్: ఐకానిక్ ఫోటోను ఎమర్జెన్సీ తర్వాత ఇందిరా గాంధీకి సీతారాం ఏచూరి క్షమాపణలు చెబుతున్నట్లుగా తప్పుగా షేర్ చేశారు.

Fact Check: ಅಂಗಡಿಯನ್ನು ಧ್ವಂಸಗೊಳಿಸುತ್ತಿದ್ದವರಿಗೆ ಆರ್ಮಿಯವರು ಗನ್ ಪಾಯಿಂಟ್ ತೋರಿದ ವೀಡಿಯೊ ಭಾರತದ್ದಲ್ಲ