மணிப்பூரில் ஆணை நிர்வாணமாக அழைத்துச் சென்றதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 
Tamil

Fact check: இளைஞர் ஒருவர் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படும் காணொலி; மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்வா?

மணிப்பூரில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படுவது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Ahamed Ali

“மணிப்பூர் கொடுமைக்கு சற்றும் குறைவில்லாதது இது.. பார்க்கவே நெஞ்சம் பதைக்கிறது…” என்ற கேப்ஷனுடன் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்பும் சிலர், ஒரு நபரின் அந்தரங்க உறுப்பை நெருப்பால் சுடும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் இது மணிப்பூரில் நடந்த சம்பவம் என்பது போன்று பரப்பி வருகின்றனர்.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இது தெலங்கானாவில் நடைபெற்ற சம்பவம் என்பது தெரியவந்தது. முதலில், காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, The Observer Post என்ற ஊடகம் கடந்த ஜனவரி 24ம் தேதி இக்காணொலியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.

அதன்படி, “ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்ட ஒரு கும்பல் ஒரு இளைஞனை பிணைக் கைதியாக பிடித்து, அவனது அந்தரங்க உறுப்பை எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.  'ஓம்' சின்னம் கொண்ட காவி கொடியை அவமதித்ததற்காக அவரை இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து தேடுகையில் இந்தியா டுடே இது தொடர்பாக கடந்த ஜனவரி 25ம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “தெலங்கானா மாநிலம் சங்கரெட்டியில் காவி கொடியை அவமதிக்கும் வகையில் ரீல்ஸ் பதிவேற்றியதால் ஒரு இஸ்லாமியரை ஒரு கும்பலால் அடித்து நிர்வாணமாக இழுத்துச் சென்றனர். மேலும், அவரது அந்தரங்க உறுப்பை நெருப்பால் சுட்டனர். மேலும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அந்த நபர் மீது கிராம மக்கள் புகார் அளித்தனர். அதே போன்று, தன்னை தாக்கியதாக கிராம மக்கள் மீது முஸ்லிம் இளைஞரும் புகார் அளித்துள்ளார். இருதரப்பு புகாரையும் பெற்றுக்கொண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. இதனை Kerala Kaumudi என்ற ஊடகமும் கடந்த ஜனவரி 25ம் தேதி செய்தியாக வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக மணிப்பூரில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படுவது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் தெலங்கானாவில் நடைபெற்ற சம்பவம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Humayun Kabir’s statement on Babri Masjid leads to protest, police action? Here are the facts

Fact Check: താഴെ വീഴുന്ന ആനയും നിര്‍ത്താതെ പോകുന്ന ലോറിയും - വീഡിയോ സത്യമോ?

Fact Check: ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று பரவும் காணொலி? உண்மை என்ன

Fact Check: ಜಪಾನ್‌ನಲ್ಲಿ ಭೀಕರ ಭೂಕಂಪ ಎಂದು ವೈರಲ್ ಆಗುತ್ತಿರುವ ವೀಡಿಯೊದ ಹಿಂದಿನ ಸತ್ಯವೇನು?

Fact Check: శ్రీలంక వరదల్లో ఏనుగు కుక్కని కాపాడుతున్న నిజమైన దృశ్యాలా? కాదు, ఇది AI-జనరేటెడ్ వీడియో