ஆர்.எஸ்.எஸ் பிரமுகரால் கொல்லப்பட்ட இஸ்லாமிய மத குரு என்று வைரலாகும் தகவல் 
Tamil

Fact Check: ஆர்‌.எஸ்.எஸ் பிரமுகரால் கொல்லப்பட்டாரா இஸ்லாமிய மத குரு?

Ahamed Ali

“உத்தர பிரதேசம் மாநிலத்தில் நேற்று முன்தினம் RSS சங்பரிவார இந்து தீவிரவாதிகளால் மௌலானா முகமது பாரூக்  காஸ்மி கொலை செய்யப்பட்டார்-!!” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. இஸ்லாமிய மத குருவை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை செய்ததாக இத்தகவல் பகிரப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய மத குரு என்று வைரலாகும் தகவல்

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் அவர் தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக கொலை செய்யப்பட்டார் என்பதும் கொலை செய்தவர் ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களில் இல்லை என்பதும் தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Siasat Daily கடந்த ஜுன் 9ஆம் தேதி இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “உத்தரபிரதேசத்தின் சோன்பூர் கிராமத்தில் 70 வயதான மதரஸா உரிமையாளரும் பிரதாப்கர் பிரிவின் ஜமியத்-இ-உலமா ஹிந்த் பொதுச் செயலாளருமான மௌலானா முகமது ஃபாரூக் நிலத் தகராறில் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் நிலவியது.

காவல்துறை அறிக்கையின்படி, நிலப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்ட சந்திரமணி திவாரியின்(45) வீட்டிற்கு முகமது ஃபாரூக் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. உள்ளூர் ஊடகங்கள், இறந்த ஃபாரூக் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திவாரியிடம் இருந்து நிலத்தை வாங்கினார், ஆனால் அதை சொந்தமாக்கவில்லை. இருப்பினும், திவாரி அந்த நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்துவந்தார். மேலும், சமீபத்தில் ஃபரூக்கிடம் திவாரி கடன் வாங்கியுள்ளார். இச்சூழலில், சிறிது காலம் கழித்து திவாரி ஃபரூக் வாங்கிய அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றார் என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக பேசிய ஃபரூக்கின் மருமகன் முகமது சஜித், நிலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக திவாரி, ஃபரூக்கை சனிக்கிழமை(ஜுன் 8) தனது வீட்டிற்கு அழைத்ததாகவும், ஆனால் மோதல் வன்முறையாக மாறியதாகவும், திவாரி மற்றும் அவரது கூட்டாளிகள் இரும்புக் கம்பிகளால் ஃபாரூக்கைத் தாக்கியதாகவும், இதனாலேயே அவர் மரணித்தார் என்று கூறினார்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், நேற்று (ஜுன் 10) The Quint இது தொடர்பாக விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், “தந்தை(ஃபாரூக்) எப்போதும் அவருக்கு(திவாரி) உதவி செய்தார். இன்று, ஒரு நிலத்துக்காக தந்தையை கொலை செய்துள்ளார் என்று ஃபரூக்கின் மகன் முஃப்தி மாமுன் கூறியுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இதற்கு முன் எங்களுக்கு எந்தவிதமான தகராறோ அல்லது மோதலோ இருந்ததில்லை.  எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்.

மேலும், இதில் எவ்வித மதம் தொடர்பான பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார் மாமூன். காவல்துறை ஆய்வாளர் தர்மேந்திர சிங் கூறுகையில், இது மத ரீதியான பிரச்சினை அல்ல. இது தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேவி பிரசாத் மற்றும் திவாரியின் மனைவி சீதா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற மூவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளில் இருப்பதாக எந்த ஒரு தகவலும் செய்தியும் இல்லை.

Conclusion:

நம் தேடலின் முடிவாக ஆர்எஸ்எஸ் பிரமுகரால் கொல்லப்பட்ட இஸ்லாமியர் என்று வைரலாகும் தகவல் உண்மையில்லை என்றும் தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக கொலை செய்யப்பட்டார் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Video of Nashik cop prohibiting bhajans near mosques during Azaan shared as recent

Fact Check: ഫ്രാന്‍സില്‍ കൊച്ചുകു‍ഞ്ഞിനെ ആക്രമിച്ച് മുസ്ലിം കുടിയേറ്റക്കാരന്‍? വീഡിയോയുടെ വാസ്തവം

Fact Check: சென்னை சாலைகள் வெள்ளநீரில் மூழ்கியதா? உண்மை என்ன?

ఫ్యాక్ట్ చెక్: హైదరాబాద్‌లోని దుర్గా విగ్రహం ధ్వంసమైన ఘటనను మతపరమైన కోణంతో ప్రచారం చేస్తున్నారు

Fact Check: ಆಹಾರದಲ್ಲಿ ಮೂತ್ರ ಬೆರೆಸಿದ ಆರೋಪದ ಮೇಲೆ ಬಂಧನವಾಗಿರುವ ಮಹಿಳೆ ಮುಸ್ಲಿಂ ಅಲ್ಲ