Tamil

Fact Check: 'நாம்தமிழர் கட்சி முன்னிலை' என NDTV Tamil கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் புதிய வாக்காளர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு இருப்பதாக 'NDTV Tamil’ என்ற ஊடகம் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக ஒரு செய்திப் படம் பகிரப்பட்டு வருகிறது

Southcheck Network

“NDTV நடத்திய கருத்துக்கணிப்பில் First time Voters எந்த கட்சிக்கு வாக்களிக்க போகிறார்கள் என்ற கேள்விக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது…” என்ற தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Fact-Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்று தெரியவந்தது.

வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய NDTV இதுபோன்ற கருத்துக்கணிப்பை நடத்தியதா என்பதை கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறான எந்த ஒரு கருத்துக்கணிப்பும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது.

மேலும், NDTV ஊடக நிறுவனம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தனது செய்திச் சேவைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழைப் பொறுத்தவரை, அந்த நிறுவனத்திற்குச் செய்திப் பிரிவு எதுவும் கிடையாது. "NDTV Tamil Cinema" என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் மட்டுமே உள்ளது, அதுவும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான செயல்பாடும் இன்றி முடங்கிக் கிடைக்கிறது.

மேலும், NDTV ஊடக நிறுவனம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தனது செய்திச் சேவைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழைப் பொறுத்தவரை, அந்த நிறுவனத்திற்குச் செய்திப் பிரிவு எதுவும் கிடையாது. "NDTV Tamil Cinema" என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் மட்டுமே உள்ளது, அதுவும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான செயல்பாடும் இன்றி முடங்கிக் கிடைக்கிறது.

நிலைமை இவ்வாறிருக்க, இல்லாத ஒரு ஊடகத்தின் பெயரையும் லோகோவையும் பயன்படுத்தி, திட்டமிட்டு இத்தகைய போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன.

​Conclusion:

நம் தேடலின் முடிவாக, தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில், "புதிய வாக்களர்களின் மனநிலை" என்ற ஒரு கருத்துக்கணிப்பில் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகிப்பதாக NDTV Tamil Cinema ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்றும் அவ்வாறான எந்த ஒரு ஊடகமும் இயக்கத்தில் இல்லை என்றும் தெரியவந்தது.

Fact Check: Video shows Ukraine’s recent strike on Russia’s Kuibyshev oil refinery? No, here are the facts

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: இரு கைகளும் இல்லாத பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் வைரல் காணொலி உண்மையா?

Fact Check: ದೆಹಲಿಯಲ್ಲಿ ಮಳೆಯ ನಡುವೆಯೂ ಮುಖ್ಯ ಚುನಾವಣಾ ಆಯುಕ್ತರ ವಿರುದ್ಧ ಪ್ರತಿಭಟನೆ? ಇಲ್ಲ, ಇದು ಹಳೆಯ ವಿಡಿಯೊ

Fact Check: ఢిల్లీలో సీఈసీ జ్ఞానేశ్ కుమార్‌కు వ్యతిరేకంగా నిరసనా? కాదు, పాత వీడియో వైరల్