சமூகத்தில் சென்னையின் சாலையில் ஏற்பட்ட படுகுழி 
Tamil

Fact Check: சமீபத்திய மழையின் போது சென்னையின் சாலையில் படுகுழி ஏற்பட்டதா? உண்மை என்ன

சமீபத்தில் சென்னையில் பெய்த மழையின் போது ஏற்பட்ட படுகுழி என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Southcheck Network

வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பெய்த மழையால் சாலையின் நடுவே படுகுழி ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact Check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாவும் புகைப்படம் 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

வைரலாகும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2017ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி தி நியூஸ் மினிட் ஊடகம் வைரலாகும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.

தி நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள செய்தி

அதன்படி, “கீழ் பாக்கத்தில் உள்ள டெய்லர் சாலை - ஈ.வி.ஆர் சந்திப்பில் ஒரு பெரிய குழி ஏற்பட்டிருந்தது. காவல்துறை தகவலின்படி, கீழ் பாக்கத்தில் ஏற்பட்ட பள்ளம், அப்பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளின் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை மெட்ரோ அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகமும் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருந்தது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் சமீபத்தில் சென்னையில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட படுகுழி என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

Fact Check: Hindu temple attacked in Bangladesh? No, claim is false

Fact Check: തദ്ദേശ തിരഞ്ഞെടുപ്പില്‍ ഇസ്‍ലാമിക മുദ്രാവാക്യവുമായി യുഡിഎഫ് പിന്തുണയോടെ വെല്‍ഫെയര്‍ പാര്‍ട്ടി സ്ഥാനാര്‍ത്ഥി? പോസ്റ്ററിന്റെ വാസ്തവം

Fact Check: ராஜ்நாத் சிங் காலில் விழுந்த திரௌபதி முர்மு? உண்மை என்ன

Fact Check: ಬಿರಿಯಾನಿಗೆ ಕೊಳಚೆ ನೀರು ಬೆರೆಸಿದ ಮುಸ್ಲಿಂ ವ್ಯಕ್ತಿ?, ವೈರಲ್ ವೀಡಿಯೊದ ಸತ್ಯಾಂಶ ಇಲ್ಲಿದೆ

Fact Check: బంగ్లాదేశ్‌లో హిజాబ్ ధరించనందుకు క్రైస్తవ గిరిజన మహిళపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి