fifthestatedigital1
Tamil

Fact Check: பிரதமர் மோடி, சோனியா காந்தியை நேரில் சந்தித்தாரா? வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன

சமீபத்தில் சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சோனியா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் சந்திப்பது போன்று உள்ள புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Southcheck Network

“இது தான் எல்லோருக்கும் ஆன தலைவன்.... நீங்கள் எவ்வளவு தூற்றினாலும் அவர் கடமையை பாரபட்சம் பார்க்காமல் செய்யும் மகான் எங்கள் தலைவர் மோடி…” என்று சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்களை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. "அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மாபெரும் தலைவர் மோடி" என்ற புகழாரத்துடன் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் AI தொளில்நுட்பத்தால் உருவாக்கபட்டது என்று தெரியவந்தது.

முதலில் சோனியா காந்தி அவர்களின் உடல்நிலை குறித்து டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை ஆய்வு செய்தோம். மருத்துவமனைத் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் வெளியிட்ட தகவலின்படி, சோனியா காந்தி அவர்கள் காய்ச்சல் மற்றும் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தது உண்மைதான். ஆனால், அங்கு பிரதமர் மோடி வருகை தந்தது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

வைரலாகும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தினோம். நாட்டின் இரு பெரும் தலைவர்கள் சந்தித்துக் கொண்டால், அது அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக வெளியாகி இருக்கும். ஆனால், முன்னணி ஊடகங்கள் எதிலும் இத்தகைய சந்திப்பு நடந்ததாகச் செய்தி வெளியாகவில்லை.

புகைப்படத்தின் தரம் மற்றும் நுணுக்கங்களை ஆய்வு செய்தபோது, இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனை உறுதிப்படுத்த 'Hive Moderation' போன்ற AI கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்தினோம். அப்போது, அப்புகைப்படம் 99% AI தொளில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

Conclusion:

ஆய்வின் முடிவில், அந்தப் புகைப்படம் 100% செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான படம் என்பது உறுதியானது. பிரதமர் மோடி, சோனியா காந்தியை மருத்துவமனையில் சந்திக்கவில்லை. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் இந்தப் புகைப்படம் பரப்பப்பட்டுள்ளது.

Fact Check: US troops flee during Iranian attacks? No, video shows a military drill

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: மது அருந்துவோருக்கு இலவசப் பேருந்து பயணம் என்று அமைச்சர் விக்னேஷ் அறிவித்தாரா? உண்மை என்ன

Fact Check: ರಾಹುಲ್-ಪ್ರಿಯಾಂಕಾ ಗಾಂಧಿ ಅವರ ಉಪಾಹಾರ ಕೂಟದಿಂದ ಮಲ್ಲಿಕಾರ್ಜುನ ಖರ್ಗೆ ಅವರನ್ನು ದೂರವಿಡಲಾಗಿದೆ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: బంగ్లాదేశ్‌లో హిందూ ఉపాధ్యాయురాలిపై అత్యాచారం, హత్య చేసిన ముస్లిం వ్యక్తి? కాదు, ఇది స్క్రిప్టెడ్ వీడియో