தொகுப்பாளர் அப்துல் ஹமீது மரணித்ததாக சமூக வலைதளங்களில் வைரலான தகவல் 
Tamil

Fact Check: மரணித்தாரா தொகுப்பாளர் அப்துல் ஹமீது? உண்மை என்ன?

தொகுப்பாளர் அப்துல் ஹமீது மரணித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக இருந்து பின்னர் சன் டிவியின் “லலிதாவின் பாட்டுக்கு பாட்டு” நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் அப்துல் ஹமீது‌. பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவர் திடீரென மரணித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் அப்துல் ஹமீது மரணிக்கவில்லை என்பது தெரியவந்தது. இத்தகவலின் உண்மை தன்மையை கண்டறிய அது தொடர்பாக சமூக வலைதளங்களில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “பிரபல வர்ணனையாளர் அப்துல் ஹமீது உடல் நலம் குறித்து பரவும் தகவல் உண்மை இல்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு அவரது உறவினர் விளக்கம் அளித்துள்ளார்” என்று இன்று(ஜுன் 24) ஜெயா ப்ளஸ் ஊடகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும், சன் தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளர் விஜயசாரதி, “திரு. அப்துல் ஹமீது அவர்களை பற்றி ஒரு வதந்தி பரவி வருகிறது. அவரிடம் இப்போது பேசினேன். “ஒருவரின் மறைவுக்கு பிறகு எத்தனை பேர் அவருக்காக இருக்கிறார்கள் என்று இறைவன் உணர்த்தும் தருணம் இது, விஜயசாரதி” என்று அன்புடன் பேசினார். யப்பா எல்லாத்துக்கும் எதுக்குங்க இப்படி fake news?? '' என்று அப்துல் ஹமீது நலமுடன் இருப்பதாக எக்ஸ் தளத்தில் இன்று(ஜுன் 24) பதிவிட்டுள்ளார்.

அதே போன்று ATBC(Australian Tamil Broadcasting Corporation) வானொலி தொகுப்பாளர் கானா பிரபா, “உலகத் தமிழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் நலமுடன் உள்ளார் வதந்தி பரப்பாதீர்” என்று இன்று(ஜுன் 24) எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவரைப் போன்றே அப்துல் ஹமீதின் நண்பரான அக்கரைப்பற்று அப்துல் காதர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அன்பு நண்பரும் உலகப்புகழ் அறிவிப்பாளரும் என் மீது பாசம் கொண்ட நேசநண்பன் B.H. Abdul Hameed அவர்களுடன் இப்போது (1நிமிடத்துக்கு முன்) தொலைபேசியில் உரையாடினேன். அவர் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்தினார். #வதந்திகளை_நம்ப_வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

பின்னர், “ஒரு தந்தை மரணித்தால் அல்லது சுகயீனமுற்றால் ஒரு மகனிடம் எப்படி அது பற்றி விசாரிப்பார்களோ அதே போல் தான் காலையிலிருந்து எனக்கு வாட்ஸ்அப் மூலமும் தொலைபேசி மூலமும் மெசஞ்சர் மூலமும் நண்பர்கள் அழைத்த வண்ணமே உள்ளார்கள் #உங்கள்_நண்பருக்கு என்ன_நடந்தது?என்று கேட்ட வண்ணமே உள்ளார்கள்.நான் நண்பர் B.H. Abdul Hameed  அவர்களுடன் உரையாடி அவரது உடல்நிலையில் எதுவிதமான பாதிப்புமில்லை மிக நலமாக இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தினார்.#வதந்திகளை_நம்பவேண்டாம்” என்று அப்துல் காதர் விளக்கமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக முசலி Media என்ற இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில், “தற்போது B H அப்துல் ஹமீட் இல்லத்தில்….” என்ற கேப்ஷனுடன் தற்போது அப்துல் ஹமீது நலமுடன் சிரித்து உரையாடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே 2023ஆம் ஆண்டு அப்துல் ஹமீது மரணித்ததாக வதந்தி பரவி நிலையில், தான் நலமுடன் இருப்பதாக அவரே விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக தொகுப்பாளர் அப்துல் ஹமீது மரணித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் வதந்தி என்றும் அவர் மரணிக்கவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் , ஊடகங்கள் மற்றும் நண்பர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Fact Check: అల్ల‌ర్ల‌కు పాల్ప‌డిన వ్య‌క్తుల‌కు శిరో ముండ‌నం చేసి ఊరేగించినది యూపీలో కాదు.. నిజం ఇక్క‌డ తెలుసుకోండి

Fact Check: Tel Aviv on fire amid Israel-Iran conflict? No, video is old and from China

Fact Check: സര്‍ക്കാര്‍ സ്കൂളില്‍ ഹജ്ജ് കര്‍മങ്ങള്‍ പരിശീലിപ്പിച്ചോ? വീഡിയോയുടെ വാസ്തവം

Fact Check: ஷங்கர்பள்ளி ரயில் தண்டவாளத்தில் இஸ்லாமிய பெண் தனது காரை நிறுத்திவிட்டு இறங்க மறுத்தாரா? உண்மை அறிக

Fact Check: ಪ್ರಯಾಗ್‌ರಾಜ್‌ನಲ್ಲಿ ಗಲಭೆ ನಡೆಸಿದವರ ವಿರುದ್ಧ ಯುಪಿ ಪೊಲೀಸರು ಕ್ರಮ? ಇಲ್ಲಿ, ಇದು ರಾಜಸ್ಥಾನದ ವೀಡಿಯೊ