ரத்தன் டாடாவின் கருத்து என்று வைரலாகும் தகவல் 
Tamil

Fact Check: ஆதார் கார்ட் மூலமாக மது விற்க வேண்டும் என்று கூறினாரா ரத்தன் டாடா?

ரத்தன் டாடா மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக செய்ய வேண்டும் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

“மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் உணவுக்கான மானியங்கள் நிறுத்தப்படவேண்டும். மது வாங்க வசதி உள்ளவர்களால் கண்டிப்பாக உணவும் வாங்க முடியும். நாம் அவர்களுக்கு இலவசமாக உணவைக் கொடுத்தால் அவர்கள் பணத்தைக் கொடுத்து மது வாங்குகிறார்கள்.” என்று டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான ரத்தன் டாடா கூறியதாக சமூக வலைதளங்களில் அவருடைய புகைப்படத்துடன் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம் மற்றும் தகவல்

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் அவர் இவ்வாறு கூறவில்லை என்பது தெரியவந்தது. வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய அது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அவர் இவ்வாறு கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

மேலும், அவரது சமூக வலைதள பக்கங்களில் இவ்வாறான கருத்தை பதிவிட்டுள்ளாரா என்று தேடியபோது, அவ்வாறான எந்த ஒரு பதிவையும் அவர் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, மதுவிற்பனை தொடர்பாக வைரலாகும் பதிவிற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “இவ்வாறாக நான் கூறவில்லை. நன்றி” என்று ரத்தன் டாடா கூறிய செய்தியை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் NDTV, Hindustan Times, Times Now உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலின் முடிவாக மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக செய்ய வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியதாக சமூகவலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் அவர் அவ்வாறு கூறவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Bihar polls – Kharge warns people against Rahul, Tejashwi Yadav? No, video is edited

Fact Check: കേരളത്തിലെ അതിദരിദ്ര കുടുംബം - ചിത്രത്തിന്റെ സത്യമറിയാം

Fact Check: சமீபத்திய மழையின் போது சென்னையின் சாலையில் படுகுழி ஏற்பட்டதா? உண்மை என்ன

Fact Check: ಹಿಜಾಬ್ ಕಾನೂನು ರದ್ದುಗೊಳಿಸಿದ್ದಕ್ಕೆ ಇರಾನಿನ ಮಹಿಳೆಯರು ಹಿಜಾಬ್‌ಗಳನ್ನು ಸುಟ್ಟು ಸಂಭ್ರಮಿಸಿದ್ದಾರೆಯೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: వాట్సాప్, ఫోన్ కాల్ కొత్త నియమాలు త్వరలోనే అమల్లోకి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి