கின்சால் ஏவுகணையை கொண்டு உக்ரைனை தாக்கிய ரஷ்யா 
Tamil

Fact Check: ரஷ்யா உக்ரைனை கின்சால் ஏவுகணையைக் கொண்டு தாக்கியதா? உண்மை அறிக

உக்ரைனை ரஷ்யாவின் கின்சால் ஏவுகணை தாக்கிய காட்சி என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Ahamed Ali

“ரஷ்யாவின் #Kinzhal ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு அதிகவேகத்தில் செல்ல கூடிய #Kinzhal ஏவுகணை Ukraine ல் 136 மீட்டர் ஆழத்தில் இருந்த ஆயுத சேமிப்பு கிடங்கு மீது நடத்திய தாக்குதல் வீடியோ” என்ற கேப்ஷனுடன் மாபெரும் குண்டுவெடிப்பு நிகழ்வு ஏற்படுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி VFX தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது. 

வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, ஒலியை விட 10 மடங்கு வேகமாக செல்லக் கூடிய கின்சால் ஏவுகணையை கொண்டு உக்ரைனின் விமான தளங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக The Hindu 2024ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இத்தாக்குதல் தொடர்பாக எவ்வித காணொலியும் செய்தியாக வெளியிடப்படவில்லை.

கின்சால் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக The Hindu வெளியிட்டுள்ள செய்தி

தொடர்ந்து, வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி InsanePatient2 என்ற யூடியூப் சேனலில் “ரஷ்யா அணு ஆயுதப் போரைத் துவக்கினால் என்ன செய்வது?” என்ற ஆங்கில தலைப்புடன் வைரலாகும் அதே காணொலியை வெளியிட்டுள்ளது.

மேலும், அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில் இக்காணொலி Hitfilm Pro என்ற மென்பொருள் உதவியுடன் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தன்னை VFX ஆர்டிஸ்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார். கம்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் அசாதாரணமான காட்சிகளை உருவாக்குவது VFX எனப்படும். வைரலாகும் காணொலியைப் போன்ற பல்வேறு VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காட்சிகளை தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் InsanePatient2 என்ற பயனர் வெளியிட்டுள்ளார்.

Conclusion:

முடிவாக, ரஷ்யாவின் கின்சால் ஏவுகணை உக்ரைனை தாக்கிய காட்சி என்று வைரலாகும் காணொலி VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படுகிறது.

Fact Check: Kavin Selva Ganesh’s murder video goes viral? No, here are the facts

Fact Check: രക്ഷാബന്ധന്‍ സമ്മാനമായി സൗജന്യ റീച്ചാര്‍ജ്? പ്രചരിക്കുന്ന വാട്സാപ്പ് സന്ദേശത്തിന്റെ വാസ്തവം

Fact Check: வைரலாகும் மேக வெடிப்பு காட்சி? வானிலிருந்து கொட்டிய பெருமழை உண்மை தானா

Fact Check: ರಾಮ ಮತ್ತು ಹನುಮಂತನ ವಿಗ್ರಹಕ್ಕೆ ಹಾನಿ ಮಾಡುತ್ತಿರುವವರು ಮುಸ್ಲಿಮರಲ್ಲ, ಇಲ್ಲಿದೆ ಸತ್ಯ

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి