fifthestatedigital1
Tamil

Fact Check: பள்ளி மாணவர்கள் பீஸ்ட் பட பாடல் பாடினரா? தவெக ஆட்சியில் நடைபெற்றதா

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் பீஸ்ட் பட பாடல் பாடியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Southcheck Network

பள்ளி வகுப்பறை ஒன்றில் மாணவர்கள் சிலர் அமர்ந்து முதல்வர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இருந்து பாடல் ஒன்றைப் பாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தவெக ஆட்சியில் நடைபெற்றது என்று பலரும் இந்த காணொலியை தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் இந்த காணொலி தற்பொழுது அரசுப் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்வு அல்ல. இது சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு பழைய காணொலியாகும்.

இந்த காணொலியின் நம்பகத்தன்மை குறித்து நாம் ஆய்வு செய்தபோது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று Ku Karthik என்கிற பாடல் ஆசிரியர் வெளியிடப்பட்ட ரீல்ஸ் (Reel) காணொலிப் பதிவு நமக்குக் கிடைத்தது. இதன் மூலம் பெரலாகும் காணொளி பழையது என்றும் 2022 ஆம் ஆண்டு சேர்ந்தது என்றும் தெரிய வந்தது.

மேலும், அவரே இப்பாடலை பாடியவர் என்று சன் டிவி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்த காணொலியின் வாயிலாக தெரியவந்தது. அதில், பாடலாசிரியரின் பெயரில் Ku Karthik என்று இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து, இது குறித்து தேடுகையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு அலகும் வைரலாகும் இப்பாடல் 2022 ஆம் ஆண்டு பாடப்பட்டது என்றும் சமீபத்தில் பாடப்பட்டது கிடையாது என்றும் ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இப்பாடல் எந்த பள்ளியில் எதற்காக பாடப்பட்டது என்ற விவரங்கள் இல்லை.

Conclusion:

பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் சினிமா பாடல் பாடியதாகப் பரவும் காணொலி முற்றிலும் போலியானது மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய காணொலியை, தற்பொழுது நடந்த சம்பவம் போல சமூக வலைதளங்களில் வதந்தியாகப் பரப்பி வருகின்றனர் என்பதே உண்மையாகும்.

Fact Check: Flydubai flight attack video viral? No, here are the facts

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ராஜஸ்தான் தார் பாலைவன தேசிய நெடுஞ்சாலை எனப் பரப்பப்படும் காணொலி? உண்மை அறிக

Fact Check: ಸಿಜೆಪಿ ಪ್ರತಿಭಟನೆಯಲ್ಲಿ ಪೊಲೀಸರ ಮೇಲೆ ದೌರ್ಜನ್ಯ? ಸುಳ್ಳು, ವೈರಲ್ ವಿಡಿಯೊದ ಹಿನ್ನೆಲೆ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ఢిల్లీలో సీఈసీ జ్ఞానేశ్ కుమార్‌కు వ్యతిరేకంగా నిరసనా? కాదు, పాత వీడియో వైరల్