இன்று இரவு சூரியப் புயல் உலகிற்கு மிக அருகில் வர உள்ளதாக வைரலாகும் தகவல் 
Tamil

Fact Check: இன்று இரவு பூமிக்கு வெகு அருகில் சூரியப் புயல்கள் கடக்க உள்ளனவா? உண்மை என்ன?

சூரியப் புயல்கள் இன்று இரவு பூமிக்கு வெகு அருகில் கடக்க இருப்பதாக நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை தகவல் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

Ahamed Ali

“இன்று இரவு செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை உலக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை. இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதனால், இன்றிரவு 12:30 தொடக்கம், 3:30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள். போன்களை உங்கள் உடம்புக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம். அவை பயங்கரமான சேதத்தை உண்டுபண்ணும் எனவும், ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அந்த நேரத்தில் கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் 'NASA' செய்தி அறிவித்துள்ளது. உடனடியாக பகிர்ந்து உங்கள் உறவுகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்க” என்ற தகவலுடன் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை இந்த அறிவிப்பை வெளியிட்டது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அதில் “CBI emergency report“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரலாகும் புகைப்படம்

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் முற்றிலும் தவறானது என்று தெரியவந்துள்ளது. முதலில், வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல் உண்மை தானா என்று கூகுளில் கீவர்ட சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023 நவம்பர் 30ஆம் தேதி Livemint செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “நாசா மற்றும் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மைய வல்லுநர்கள் வரும் நவம்பர் 30ஆம் தேதி பூமியைத் தாக்கும் சூரியப் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கரோனல் மாஸ் எஜெக்ஷன் என்பது சூரியனில் இருந்து வெளிப்படும் அலைகளைக் கொண்டுள்ளது, அவை அதிக சார்ஜ் செய்யப்பட்ட அயனிகளைக் கொண்டுள்ளதால் அவை பூமியில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சேதப்படுத்தும் திறன் கொண்டவை” என்று கூறப்பட்டுள்ளது. இதே செய்தியை பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. மேலும், 2024ஆம் ஆண்டு சூரியப் புயல்கள் ஏதும் வருவதாக எந்த ஒரு அறிவிப்பையும் நாசாவோ அல்லது இந்திய வானிலை ஆராய்ச்சி மையமோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது குறித்து அகரம் அறக்கட்டளையைத் தொடர்புகொண்டு பேசுகையில், “முதலில் இத்தகவலில் இடம் பெற்றிருக்கும் தொலைபேசி எண் அகரம் அறக்கட்டளை உடையது இல்லை என்றும் இவ்வாறான தகவலை தாங்கள் வெளியிடவில்லை. இது முற்றிலும் தவறான தகவல்” என்றும் சவுத்செக்கிற்கு விளக்கம் அளித்தனர்.

Conclusion:

நம் தேடலின் முடிவில், இன்று இரவு சூரியப் புயல்கள் பூமிக்கு வெகு அருகில் கடக்க இருப்பதாக வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Pro-Palestine march in Kerala? No, video shows protest against toll booth

Fact Check: ഓണം ബംപറടിച്ച സ്ത്രീയുടെ ചിത്രം? സത്യമറിയാം

Fact Check: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்தாரா விஜய்?

Fact Check: Christian church vandalised in India? No, video is from Pakistan

Fact Check: ಕಾಂತಾರ ಚಾಪ್ಟರ್ 1 ಸಿನಿಮಾ ನೋಡಿ ರಶ್ಮಿಕಾ ರಿಯಾಕ್ಷನ್ ಎಂದು 2022ರ ವೀಡಿಯೊ ವೈರಲ್