ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட தந்தை மற்றும் மகன் 
Tamil

Fact Check: தந்தையும் மகனும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டனரா?

ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்ட தந்தை மகன் என்று சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

வயது மூத்த பிராமணர்கள் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரவியது. தற்போது, “சங்கிங்க உலகமே தனி தான் கதையல்ல நிஜம்.. தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி ..” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், மாலையுடன் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் இருப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இக்காணொலி திட்டமிட்டு எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொளியை ஆய்வு செய்தோம். அப்போது, அதன் ஒரு பகுதியில், “இந்த காணொலி முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இனம், நிறம், வம்சாவளி, தேசிய அடையாளம், இனக்குழு, வயது, மதம், திருமணம் அல்லது பெற்றோர் நிலை, உடல் அல்லது மன குறைபாடு, பாலினம், நோக்குநிலை பாலினம், பாலின அடையாளம் அல்லது வெளிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அவமரியாதை அல்லது அவதூறு செய்யும் நோக்கம் இக்காணொலியில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், அதில் Kanhaiya Singh என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

காணொலியில் உள்ள பொறுப்பு துறப்பு

அதனைக் கொண்டு யூடியூபில் Kanhaiya Singh என்று சர்ச் செய்து பார்த்ததில், கடந்த நவம்பர் 10ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி Kanhaiya Singh shorts என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், அதே சேனலில் அக்காணொலியில் வரக்கூடிய நபர்கள் நடித்துள்ள பல்வேறு பொழுதுபோக்கு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலின் முடிவாக தந்தையும் மகனும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் அக்காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Ragging in Tamil Nadu hostel – student assaulted? No, video is from Andhra

Fact Check: നേപ്പാള്‍ പ്രക്ഷോഭത്തിനിടെ പ്രധാനമന്ത്രിയ്ക്ക് ക്രൂരമര്‍‍ദനം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: இறைச்சிக்கடையில் தாயை கண்டு உருகும் கன்றுக்குட்டி? வைரல் காணொலியின் உண்மையை அறிக

Fact Check: ನೇಪಾಳಕ್ಕೆ ಮೋದಿ ಬರಬೇಕೆಂದು ಪ್ರತಿಭಟನೆ ನಡೆಯುತ್ತಿದೆಯೇ? ಇಲ್ಲ, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: నేపాల్‌లో తాత్కాలిక ప్రధానిగా బాలేంద్ర షా? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి