கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நடனமாடும் காணொலி 
Tamil

Fact Check: பெண்களுடன் சேர்ந்து நடனமாடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்; உண்மை என்ன?

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பெண்களுடன் சேர்ந்து நடனமாடும் காட்சி என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Ahamed Ali

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவர் பெண்களுடன் சேர்ந்து நடமாடுவதாக சமூக வலைதளங்களில் (காணொலி 1, காணொலி 2 - Archive) இருவேறு காணொலிகள் வைரலாகி வருகின்றன.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இது தவறான தகவல் என்றும் காணொலியில் இருப்பவர் நடனக் கலைஞர் என்றும் தெரியவந்தது.

முதலில் முத்தையா முரளிதரன் இவ்வாறு நடனம் ஆடினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறான எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, இரண்டு காணொலிகளையும் தனித்தனியே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் இரண்டு காணொலிகளையும் (காணொலி 1, காணொலி 2) Kiran Jopale என்ற நடனக் கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராம் நடனக் கலைஞரின் தோற்றமும், முத்தையா முரளிதரனின் தோற்றமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் இவரை முத்தையா முரளிதரன் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை நம்மால் அறிய முடிந்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பெண்களுடன் சேர்ந்து நடனமாடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என்று வைரலாகும் காணொலியில் இருப்பவர் நடனக் கலைஞரான Kiran Jopale என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Jio recharge for a year at just Rs 399? No, viral website is a fraud

Fact Check: കോണ്‍ഗ്രസിലെത്തിയ സന്ദീപ് വാര്യര്‍ കെ സുധാകരനെ പിതൃതുല്യനെന്ന് വിശേഷിപ്പിച്ചോ?

Fact Check: ಹಿಂದೂ ಮಹಿಳೆಯೊಂದಿಗೆ ಜಿಮ್​​ನಲ್ಲಿ ಮುಸ್ಲಿಂ ಜಿಮ್ ಟ್ರೈನರ್ ಅಸಭ್ಯ ವರ್ತನೆ?: ವೈರಲ್ ವೀಡಿಯೊದ ನಿಜಾಂಶ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ఓం బిర్లా కూతురు ముస్లీం అబ్బాయిని పెళ్లి చేసుకుందా.? వైరల్ పోస్టుల‌లో నిజమెంత‌

Fact Check: BJP MLAs removed from J&K Assembly for raising Bharat Mata slogans? Here’s the truth