டெல்லி ஸ்ரீநகர் NH44 நெடுஞ்சாலை  
Tamil

Fact Check: ஸ்ரீநகர் - டெல்லி நெடுஞ்சாலை என்று வைரலாகும் காணொலி? உண்மை அறிக

பாஜக ஆட்சியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீநகர் டெல்லியை இணைக்கும் NH44 நெடுஞ்சாலை என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Ahamed Ali

“காங்கிரஸ் இது முடியாது என்ற திட்டங்கள் பல.... என பல திட்டங்களை முடித்து நாட்டுக்கு அர்ப்பணித்து வருகிறது பிரதமர் மோடி..! அதில் ஸ்ரீநகர் to டெல்லி NH44 பணிகள் முடிவடைந்தது...!!” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இக்காணொலியில் உள்ள பாலம் சீனாவில் உள்ளது என்று தெரியவந்தது.

பரவி வரும் காணொயின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் உதவியுடன் தேடிப் பார்த்தோம். அப்போது, Highway Engineering Discoveries என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் “சீனாவின் Guizhouவில் உள்ள The Dafaqu பாலம்” என்று குறிப்பிட்டு வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.

மேலும் இது குறித்துத் தேடிய போது, China News என்ற ஊடகம் தனது எக்ஸ் பக்கத்தில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பரவி வரும் காணொலியில் உள்ள பாலத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. அதில், “தென்மேற்கு சீனாவின் Guizhou மாகாணத்தின் Zunyiல் அமைந்துள்ள 1,427 மீட்டர் உயரமுள்ள Dafaqu கிராண்ட் பாலம், ஒரு பெரிய அளவிலான கான்கிரீட் நிரப்பப்பட்ட எஃகு குழாய் வளைவு பாலமாகும்.

Renhuai-Zunyi விரைவுச்சாலையில் உள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாக, இந்த பாலம் Zunyi மற்றும் Renhuai இடையேயான தூரத்தை குறைக்கிறது. இது Guizhou கட்டுமான பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொறியியல் அற்புதம் என்று பாராட்டப்பட்டதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை China Infrastructure என்ற யூடியூப் சேனலும் காணொலியாக வெளியிட்டுள்ளது. இவற்றின் மூலம் இது சீனாவில் உள்ள பாலம் என்று தெரியவந்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக, சீனாவில் கட்டப்பட்டுள்ள Dafaqu பாலத்தின் காணொலியை, ஸ்ரீநகர் முதல் டெல்லி வரையுள்ள NH44 நெடுஞ்சாலை என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பி வருவதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Pro-Palestine march in Kerala? No, video shows protest against toll booth

Fact Check: ഓണം ബംപറടിച്ച സ്ത്രീയുടെ ചിത്രം? സത്യമറിയാം

Fact Check: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்தாரா விஜய்?

Fact Check: Christian church vandalised in India? No, video is from Pakistan

Fact Check: ಕಾಂತಾರ ಚಾಪ್ಟರ್ 1 ಸಿನಿಮಾ ನೋಡಿ ರಶ್ಮಿಕಾ ರಿಯಾಕ್ಷನ್ ಎಂದು 2022ರ ವೀಡಿಯೊ ವೈರಲ್