திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ள தவெக தலைவர் விஜய் 
Tamil

Fact Check: தவெக தலைவர் விஜய் திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளாரா? வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது

Ahamed Ali

“பக்கா பிளான்… திமுக மீண்டும் ஆட்சியில் அமர ஓட்ட பிரிக்க இறக்கிவிடபட்டவன் தான் இவன்…” என்ற கேப்ஷனுடன் தவெக தலைவர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாகவும், ஓட்டை பிரிக்க தான் விஜய் அரசியல் செய்கின்றார் என்று கூறி விஜய் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் 2018ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மருத்துவமனைக்கு விசாரிக்க சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.

பரவி வரும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பரவி வரும் புகைப்படத்துடன் "Karunanidhi still in Kauvery Hospital: Actor Vijay visits DMK chief, meets Stalin to inquire about health" என்ற தலைப்பில் First Post ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், கடந்த ஐந்து நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை, பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நடிகர் விஜய் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நடிகர் விஜய் மற்றும் மு.க. ஸ்டாலின் சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள First Post

இதே செய்தியை அதே தேதியில் The News Minute ஊடகமும் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர் விஜய் நேரில் சென்று விசாரித்தார் என்றும், அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், புதிய தலைமுறை ஊடகமும் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி, "Thalapathy Vijay at Kauvery Hospital! Meets DMK Chief Karunanidhi" என்ற தலைப்பில் காணொலியுடன் இதே செய்தி வெளியிட்டிருந்தது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் 2018ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில், நடிகர் விஜய் உடல் நலம் விசாரிக்க சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது தவறாக அரசியல் நோக்கத்தோடு பரப்பி வருகின்றனர் என்று தெரியவருகிறது.

Fact Check: Israel airdrops aid in Gaza? Find the facts here

Fact Check: ഇത് റഷ്യയിലുണ്ടായ സുനാമി ദൃശ്യങ്ങളോ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ಇದು ರಷ್ಯಾದಲ್ಲಿ ಸಂಭವಿಸಿದ ಸುನಾಮಿಯ ದೃಶ್ಯವೇ? ವೀಡಿಯೊದ ಹಿಂದಿನ ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి

Fact Check: Rajnikanth falls in garden? No, man in video is Kannada journalist