ஆங்கிலம் தெரியாமல் முழிக்கும் உதயநிதி ஸ்டாலின் fifthestatedigital1
Tamil

Fact Check: ஆங்கிலம் தெரியாமல் முழிக்கிறாரா உதயநிதி ஸ்டாலின்? உண்மை என்ன

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆங்கிலம் தெரியாமல் முழிக்கிறார் என்று காணொலி வைரலாகி வருகிறது

Ahamed Ali

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) அவரது செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்பான காணொலி வைரலாகி வருகிறது. அதில், பெண் செய்தியாளர் ஒருவர் ஆங்கிலத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்கவே அதற்கு பதில் தெரியாமல் முழிப்பது போன்று காட்சி பதிவாகியுள்ளது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி எடிட் செய்யப்பட்டது என்று தெரிய வந்தது.

வைரலாகும் காணொலியை ஆய்வு செய்ததில் பெண் செய்தியாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வக்பு திருத்த சட்டம் குறித்து கேள்வி எழுப்புவது தெரியவந்தது. இதனைக் கொண்டு இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நேற்று (ஏப்ரல் 3) பாலிமர் ஊடகம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செய்தியாளர் சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், வக்ஃப் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து கூறுங்கள் என்று பெண் செய்தியாளர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பவே, “நாங்கள் இதை (வக்ஃப் திருத்தச் சட்டத்தை) எதிர்க்கிறோம். தொடர்ந்து எதிர்ப்போம், இந்த சட்டத்தை திரும்பப் பெறச் சொல்லி முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்” என்று ஆங்கிலத்தில் பதிலளிப்பது தெளிவாக பதிவாகியுள்ளது.

மேலும், வைரலாகும் காணொலியும் பாலிமர் ஊடகம் வெளியிட்டுள்ள காணொலியும் ஒரே மாதிரியாக இருப்பதும் தெரிகிறது. இதே செய்தியை நியூஸ் 18 தமிழ்நாடு, சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களும் ஷார்ட்ஸாக தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளன.

Conclusion

முடிவாக, நம் தேடலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்றும் உண்மையில் அதன் முழு நீளக் கானொலியில் நன்றாக ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறார் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Netanyahu attacked by anti-Israeli protester? No, claim is false

Fact Check: ഓണം ബംപറടിച്ച സ്ത്രീയുടെ ചിത്രം? സത്യമറിയാം

Fact Check: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்தாரா விஜய்?

Fact Check: Christian church vandalised in India? No, video is from Pakistan

Fact Check: ಕಾಂತಾರ ಚಾಪ್ಟರ್ 1 ಸಿನಿಮಾ ನೋಡಿ ರಶ್ಮಿಕಾ ರಿಯಾಕ್ಷನ್ ಎಂದು 2022ರ ವೀಡಿಯೊ ವೈರಲ್