Tamil

Fact Check: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் போலியான காயங்களுடன் நாடகமாடியதாகப் பரவும் காணொலி? உண்மை அறிக

மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர், போலி காயங்களை உருவாக்கி நாடகமாடுவதாகக் கூறி பரவிய காணொலி, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விவாதப் பொருளானது

Southcheck Network

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர், தனது உடலில் போலியான காயங்களை ஏற்படுத்திக்கொண்டு மற்றவர்களை ஏமாற்ற முயற்சிப்பதாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. அந்த காணொலியில், நபர் ஒருவர் அமர்ந்திருக்க, மற்றொருவர் அவருக்கு சிவப்பு நிற திரவத்தைப் பூசி விடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் தேர்தல் நாடகம் என்று பலராலும் பகிரப்பட்டு வந்தது.

Fact Check:

நியூஸ் மீட்டர் மேற்கொண்ட ஆய்வில், இந்தக் காணொலிக்கும் மேற்கு வங்கத் தேர்தலுக்கும் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

இந்த காணொலியின் முக்கிய பகுதிகளைக் கொண்டு ஆய்வு செய்தபோது,  காணப்படும் இளைஞரான திப் கோஷ் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனவரி 5, 2026 அன்று இக்காணொலி முதன்முதலாக பகிரப்பட்டிருப்பதை கண்டறிய முடிந்தது. 2026 பிஸ்வ இஜ்தமாவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வருவதாக தலைப்பிட்டு இக்காணொலிவை அவர் பகிர்ந்திருந்தார்.இது ஒரு திரைப்படப் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

இது தொடர்பாகஇது கடந்த 2024 ஜனவரி மாதமே சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக The Statesman ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது, அதன் மூலம் ஒரு குறும்படம் அல்லது திரைப்படத்திற்கான ஒப்பனை (Makeup) செய்யும் காட்சிகளே இவை. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இந்தத் தற்செயலான காணொலியை, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் காயம் அடைந்தது போல் நடிக்கிறார் என்று தவறான உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

Conclusion:

வைரலாகும் அந்த காணொலியில் இருப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் அல்ல. அது ஒரு கலைப்படைப்பிற்காக (திரைப்படம்/குறும்படம்) மேக்கப் போடப்பட்ட காட்சிகளாகும். எனவே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போலியாகக் காயம் ஏற்படுத்தி நாடகமாடுகிறது என்று பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் உண்மையற்றது.

Fact Check: Video shows Ukraine’s recent strike on Russia’s Kuibyshev oil refinery? No, here are the facts

Fact Check: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്രമോദിയുടെ 76-ാം ജന്മദിനത്തില്‍ ബുര്‍ജ് ഖലീഫയില്‍ ആശംസ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: இரு கைகளும் இல்லாத பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் வைரல் காணொலி உண்மையா?

Fact Check: ದೆಹಲಿಯಲ್ಲಿ ಮಳೆಯ ನಡುವೆಯೂ ಮುಖ್ಯ ಚುನಾವಣಾ ಆಯುಕ್ತರ ವಿರುದ್ಧ ಪ್ರತಿಭಟನೆ? ಇಲ್ಲ, ಇದು ಹಳೆಯ ವಿಡಿಯೊ

Fact Check: ఢిల్లీలో సీఈసీ జ్ఞానేశ్ కుమార్‌కు వ్యతిరేకంగా నిరసనా? కాదు, పాత వీడియో వైరల్