Tamil

Fact Check: தமிழக ஆசிரியரை மாணவன் தாக்கியதாகப் பரவும் காணொலி? இது தமிழ்நாட்டில் நடந்ததா

சாதிச் சான்றிதழுக்கு கையெழுத்திட மறுத்த ஆசிரியரை மாணவன் ஒருவன் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது மேலும் இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றது என்று கூறி பரப்பி வருகின்றனர்

Southcheck Network

தமிழ்நாட்டில் சாதி சான்றிதழிலுக்கு கையெழுத்திட மறுத்த ஆசிரியரை கடுமையாக தாக்கிய இளைஞர் எனக் கூறி சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

Fact check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி ராஜஸ்தான் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. 

வைரலாகும் காணொலியின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்திய போது, Bansal News MPCG என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலை கொண்டு தொடர்ந்து தேடுகையில் இது தொடர்பாக நியூஸ் 18 ஹிந்தி ஊடகம் விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன்படி, “பிகானர் மாவட்டம் ஸ்ரீதுங்கர்கர் பகுதியில் உள்ள குன்பால்சர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டார்.

ஆசிரியர் சாதிச் சான்றிதழில் கையெழுத்திட மறுத்ததாகவும், அதைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் அவரைத் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலைமை ஆசிரியரை கட்டையால் தாக்கிய அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக கூறி தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.

Fact Check: Video shows fire at Riyadh Airport after Houthi missile attack? No, video is unrelated

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: அபிஜீத் தீப்கே அமைதியைக் காப்பதாகக் கூறி சட்டப்பூர்வமான பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட்டாரா? உண்மை அறிக

Fact Check: ಸಿಜೆಪಿ ಪ್ರತಿಭಟನೆಯಲ್ಲಿ ಸಿಖ್ ವೇಷ ಧರಿಸಿ ಸಿಕ್ಕಿಬಿದ್ದ ಮುಸ್ಲಿಂ ವ್ಯಕ್ತಿ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ఢిల్లీలో సీఈసీ జ్ఞానేశ్ కుమార్‌కు వ్యతిరేకంగా నిరసనా? కాదు, పాత వీడియో వైరల్