fifthestatedigital1
Tamil

Fact Check: இல்லாத 'பனையூர்' தொகுதியில் விஜய் போட்டியா? வைரலாகும் புகைப்படத்தின் உண்மை பின்னணி

இல்லாத ‘பனையூர்’ என்ற தொகுதியில் தவெக தலைவர் போட்டியிடுவதாக சமூக தளங்களில் வைரலாகும் புகைப்படம்

Southcheck Network

“பனையூர்சட்டமன்ற தொகுதி கிடையாது . அது சோளிங்க நல்லூர் தொகுதி! நூற்றுகணக்கான விண்ணப்பங்கள் பனையூர் தொகுதி என கொடுத்திருக்கிறார்கள்! இவர்களை தற்குறி என சொல்லாமல் என்ன சொல்வது?” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில்,  தமிழக வெற்றி கழகத்தின்(தவெக) தலைவர் விஜய் ‘பனையூர்’ என்ற தமிழகத்தில் இல்லாத சட்டமன்ற தொகுதிக்கு தனது விண்ணப்பித்தினை பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Fact-Check:

சவுத் செக்கிங் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

இது குறித்த உண்மை தன்மையை கண்டறிய முதலில் வைரலாகும் புகைப்படத்தை ஆய்வு செய்கையில் அதில் ‘பாலிமர் ஊடகத்தின்’ லோகோ இடம்பெற்றிருந்தது. இதனைக் கொண்டு அச்செய்தியை பாலிமர் ஊடகம் வெளியிட்டிப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, தவெகவின் விருப்பமுனு தாக்கல் தொடர்பான பாலிமர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியினை யூடியூபில் ஆய்வு செய்தோம். அப்போது, கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தவெகவில் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் துவங்கியுள்ளதாக நேரலை செய்தி வெளியிட்டிருந்தது.

அதன், 3:07:00 பகுதியில் வைரலாகும் அதே புகைப்படத்தின் பகுதி இடம் பெற்றுள்ளது. அதில், ‘தொகுதி எண்/பெயர்’ என்ற பகுதியில் எதுவும் எழுதப்படாமல் இருப்பது தெரிய வந்தது. 

Conclusion:

நம் தேடலின் முடிவாக தவெக தலைவர் விஜய் ‘பனையூர்’ என்ற இல்லாத தொகுதியில் போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Delhi Police drag woman protester by hair outside BRICS venue? No, video is from Andhra Pradesh

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: அமைச்சரான மூன்று மாதத்தில் பிரம்மாண்ட வீடு கட்டினாரா அமைச்சர் ராஜ்மோகன்? உண்மை அறிக

Fact Check: 95 ವರ್ಷದ ಅಜ್ಜಿ ಪೋಲ್ ವಾಲ್ಟ್ ಮಾಡಿದರೇ? ವೈರಲ್ ವಿಡಿಯೊದ ಅಸಲಿ ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: బంగ్లాదేశ్‌లో హిందూ ఉపాధ్యాయురాలిపై అత్యాచారం, హత్య చేసిన ముస్లిం వ్యక్తి? కాదు, ఇది స్క్రిప్టెడ్ వీడియో