Tamil

Fact Check: தமிழ்நாட்டில் பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் சுதந்திரமாக உலா வருவதாகப் பரவும் காணொலி உண்மையா?

தமிழ்நாட்டில் ரவுடிகள் பட்டாக்கத்தியுடன் சுதந்திரமாக திரிவதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

Southcheck Network

“திமுக ஆட்சியில் பட்டா கத்தியுடன் சுதந்திரமாக ஆட்ட ஆட்டம் போடும் ரவுடிகள்..” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது. அதில், இளைஞர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் நடனமாடும் காட்சி பதிவாகியுள்ளது.

Fact Check :

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி இலங்கையில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய முதலில் காணொலியை ஆய்வு செய்தபோது அதில் ஆடக்கூடிய நபருக்கு பின்னால் ‘சிங்கள மொழியில்’ எழுதப்பட்டிருப்பது Google Lens உதவியுடன் தெரியவந்தது. மேலும், Rangahala என்ற சிங்கள மொழி ஃபேஸ்புக் பக்கத்திலும் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அதில் இருக்கக்கூடிய எழுத்துக்களைப் பயன்படுத்தி ஜியோலொகேட் செய்து பார்த்தபோது, Golden fresh fish and meat என்ற இலங்கையின் நுகேகொடை என்ற நகரத்தில் இயங்கி வரும் இறைச்சிக்கடை என்பது தெரியவந்தது.

Conclusion

நம் தேடலில் முடிவாக தமிழ்நாட்டில் ரவுடிகள் பட்டாகத்தியுடன் சுதந்திரமாக திரிவதாக வைரலாகும் காணொலி இலங்கையில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

Fact Check: Amit Shah chased away during Hyderabad padayatra? No, here are the facts

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலம் பெற்று வீடு திரும்பியதாகப் பரவும் செய்தி? உண்மை என்ன

Fact Check: ಇದು ತ್ರಿಪುರಾದಲ್ಲಿ ಬಿಎಸ್ಎಫ್ ಸಿಬ್ಬಂದಿಯ ಮೇಲೆ ದಾಳಿ ಮಾಡಿದವರ ಬಂಧನದ ವಿಡಿಯೊ ಅಲ್ಲ

Fact Check: భారత స్వదేశీ బుల్లెట్ రైలు వీడియో? కాదు, ఇది తైవాన్‌కు చెందినది