Tamil

Fact Check: திமுக நிகழ்ச்சியில் மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டதா? வைரலாகும் புகைப்படத்தின் உண்மை பின்னணி

கட்சி நிகழ்ச்சியில் திமுகவினருக்கு மதுபானங்கள் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலாகி வருகிறது

Southcheck Network

திமுகவின் “என் வாக்குச்சாவடி, வெற்றிவாக்குசாவடி” என்ற நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெட்டகத்தில் மது பாட்டில் இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Fact check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

முதலில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குசாவடி” என்ற நிகழ்வை திமுக நடத்தி வருகிறதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, இது திமுகவின் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கான ஒரு கட்சி நிகழ்ச்சி என்பது தினமணி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் வாயிலாக தெரியவந்தது.

தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி வைரலாகும் அதே புகைப்படத்தை DMK_Updates என்ற எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், “இன்று நடைபெற இருக்கும் வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்க உள்ள சிற்றுண்டி தொகுப்பு!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது போன்று இதில் மதுபானம் இடம்பெறவில்லை.

தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தை Foto Forensic இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்கையில் இது எடிட் செய்யப்பட்டு இருப்பது உறுதியானது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் திமுக கூட்டத்தில் மதுபானம் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.

Fact Check: Video shows fire at Riyadh Airport after Houthi missile attack? No, video is unrelated

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: அபிஜீத் தீப்கே அமைதியைக் காப்பதாகக் கூறி சட்டப்பூர்வமான பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட்டாரா? உண்மை அறிக

Fact Check: ಸಿಜೆಪಿ ಪ್ರತಿಭಟನೆಯಲ್ಲಿ ಸಿಖ್ ವೇಷ ಧರಿಸಿ ಸಿಕ್ಕಿಬಿದ್ದ ಮುಸ್ಲಿಂ ವ್ಯಕ್ತಿ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ఢిల్లీలో సీఈసీ జ్ఞానేశ్ కుమార్‌కు వ్యతిరేకంగా నిరసనా? కాదు, పాత వీడియో వైరల్