fifthestatedigital1
Tamil

Fact Check: என்.டி.ஏ கூட்டணியில் இணைய முதல்வர் விஜய் முடிவு என பேசியதாகப் பரவும் காணொலி? உண்மை அறிக

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் ஆற்றிய உரையைத் திரித்து, அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையப் போவதாகக் கூறி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்

Southcheck Network

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் காங்கிரஸ் உடனான உறவை முறித்துக்கொண்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய முடிவு செய்துள்ளதாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறாக திரிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது என்று தெரியவந்தது.

வைரலாகும் இந்தக் கூற்று தொடர்பாக சவுத்செக் உண்மைக் கண்டறியும் குழு விரிவான ஆய்வை மேற்கொண்டது. வைரலான காணொலியில் முதல்வர் விஜய் பேசியதன் உண்மைப் பதிவை ஆய்வு செய்தபோது, அவர் மிசா சட்டம், சர்க்காரியா ஆணையம் மற்றும் வீராணம் விவகாரம் குறித்துப் பேசி திமுகவை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருந்தார். இதனை ANI உள்ளிட்ட ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட செப்டம்பர் 7 உரையின் முழுப் பதிவை ஆய்வு செய்ததிலும், பவன் கல்யாண், பிரதமர் நரேந்திர மோடி அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து விஜய் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது உறுதியானது. அவர் முழுக்க முழுக்க காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து மட்டுமே உரையாற்றினார்.

மேலும், ஊடக அறிக்கைகள் மற்றும் தவெகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின்படி, விஜய் தலைமையில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டிருந்ததே தவிர, என்.டி.ஏ கூட்டணியில் இணையும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Conclusion:

தமிழக சட்டமன்றத்தில் திமுகவை விமர்சித்து முதல்வர் விஜய் ஆற்றிய வழக்கமான அரசியல் உரையை எடுத்துக்கொண்டு, அவர் என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாகப் பேசியதாகக் கூறி தவறான உரையுடன் போலித் தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்பது சவுத்செக் உண்மை சரிபார்ப்பில் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Fact Check: Delhi Police open fire on Rahul Gandhi’s protest rally? No, here are the facts

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: தமிழ்நாட்டில் மகளிர் இலவசப் பேருந்தில் பெண்கள் சண்டையிட்டுத் தாக்கியதாகப் பரவும் காணொலியின் உண்மைப் பின்னணி?

Fact Check: ಜಂತರ್ ಮಂತರ್​ನಲ್ಲಿ ಗಲಭೆ ಎಬ್ಬಿಸಲು ಹಿಂದೂ ಸಂಘಟನೆಗೆ ಪೊಲೀಸ್ ಸಮವಸ್ತ್ರ ನೀಡಲಾಗಿದೆಯೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ఢిల్లీలో సీఈసీ జ్ఞానేశ్ కుమార్‌కు వ్యతిరేకంగా నిరసనా? కాదు, పాత వీడియో వైరల్