fifthestatedigital1
Tamil

Fact Check: தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தாரா? உண்மை என்ன

வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு முதல்வர் விஜய் சமூகநீதி விடுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

Southcheck Network

சமூகநீதி விடுதி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் முதல்வர் வந்து உரையாடுவதை முதன்முறையாக இப்போதுதான் பார்க்கிறேன் என்ற கருத்துடன் சமூக நீதி மாணவர் விடுதிகள் தமிழ்நாடு முதல்வர் விஜய் வரலாற்றில் முதல் முறையாக ஆய்வு மேற்கொண்டார் என்று சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் ஏற்கனவே முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் என்று தெரியவந்தது.

வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை அறிய இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின்படி, திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதி ஆகிய இடங்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு காரைக்குடியில் உள்ள விடுதிக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு தங்கியிருக்கும் மாணவிகளுடன் அமர்ந்து கலந்துரையாடிய நிகழ்வுகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலில் முடிவாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிக்காலத்தில் சமூகநீதி விடுதிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடியது மற்றும் ஆய்வு செய்தது என்பது பல்வேறு தரவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் விஜய் முதல் முறையாக சமூகநீதி விடுதிக்கு வந்து பேசுவதாக வைரலாகும் தகவல் ஆதாரமற்றது என்று தெரியவந்தது.

Fact Check: People break idols, convert to Islam over Nepal floods? No, video is from South Korea

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: முதல்வர் விஜய் பாணியில் விநாயகர் சிலை செய்யப்பட்டதாகப் பரவும் படம்: உண்மை என்ன?

Fact Check: ನೇಪಾಳದ ಪ್ರವಾಹದಲ್ಲಿ ಸಿಲುಕಿದ್ದ ವ್ಯಕ್ತಿಯನ್ನು ಆನೆಯೊಂದು ರಕ್ಷಿಸಿತೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check : ప్రధాని మోదీని దూషించినందుకు తల్లిదండ్రులు కుమార్తెను కొట్టారా? లేదు, వైరల్ వీడియో పాతది