fifthestatedigital1
Tamil

Fact Check: முதல்வர் விஜய் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றாரா ? உண்மை அறிக

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றாரா முதல்வர் விஜய்

Southcheck Network

"தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் ஓடும் முதல்வர் விஜய்" என்ற வாசகத்துடன் காணொலி சமூக ஊடகங்களில் சமீபகாலமாக மிக வேகமாகப் பரவி வருகிறது.  அந்த காணொலியை உற்றுநோக்கும்போது, அமைச்சர் செங்கோட்டையனுடன் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்திருக்க, முதல்வர் விஜய் மிக விரைவாக நடந்து செல்லும் காட்சிகள் தெளிவாகத் தெரிகின்றன.

Fact Check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவந்தது.

இணையத்தில் வைரலாகும் இந்த காணொலியின் உண்மைத்தன்மையை அறிய, அதன் முக்கியக் காட்சிகளை (Keyframes) கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்தோம். இந்தத் தேடல் நம்மை "Polimer News" ஊடகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

அங்கு கடந்த மார்ச் 28, 2026 அன்று இதே காணொலி பதிவேற்றப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம். அந்தப் பதிவில், “தலைமைச் செயலகம் வந்த போது கூட்டத்திற்குள் சிக்கிய விஜய்… செங்கோட்டையனின் தோளை பிடித்தபடியே சென்ற விஜய்..!” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து கூடுதல் விவரங்களைப் பெற மேலும் தேடியபோது, "நியூஸ் தமிழ்" ஊடகப் பக்கத்தில் வெளியான மற்றொரு செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், தற்போதைய காணொலியில் உள்ள அதே காட்சிகளைக் குறிப்பிட்டு, “சென்னை தலைமை செயலகத்திற்கு சென்றார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்“ என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதன் மூலம், கடந்த மார்ச் 28, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்துப் புகார் அளிக்கச் சென்றபோது எடுக்கப்பட்ட பழைய காணொலி இது என்பது தெளிவாகிறது. தற்போது இந்த பழைய காணொலியை முற்றிலும் தவறான ஒரு சூழலோடு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது.

Conclusion:

மக்களிடையே பரப்பப்படும் "தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் ஓடும் முதல்வர் விஜய்" என்ற காணொலி, தற்போதைய நிகழ்வு அல்ல என்பதை நமது விரிவான தேடல் மற்றும் ஆதாரங்களின் மூலம் அறிய முடிகிறது. இது தவெக தலைவர் விஜய் தேர்தல் அதிகாரியைச் சந்திக்கச் சென்றபோது எடுக்கப்பட்ட பழைய காணொலியாகும்.

Fact Check: People break idols, convert to Islam over Nepal floods? No, video is from South Korea

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: முதல்வர் விஜய் பாணியில் விநாயகர் சிலை செய்யப்பட்டதாகப் பரவும் படம்: உண்மை என்ன?

Fact Check: ನೇಪಾಳದ ಪ್ರವಾಹದಲ್ಲಿ ಸಿಲುಕಿದ್ದ ವ್ಯಕ್ತಿಯನ್ನು ಆನೆಯೊಂದು ರಕ್ಷಿಸಿತೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ‘బాంబు పరీక్ష’లో మదర్సా టీచర్, కుటుంబం మృతి? కాదు, వీడియోలో కనిపించింది సిలిండర్ పేలుడు