Tamil

Fact Check: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண் நிர்வாகிக்கு மாலை அணிவித்ததாகப் பரவும் புகைப்படத்தின் உண்மை என்ன?

கட்சி மேடையில் பெண் திமுக நிர்வாகி மற்றும் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கழுத்தில் மாலையுடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலாகி வருகிறது

Southcheck Network

“காதலுக்கு வயதில்லை வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்!!!” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக பெண் உறுப்பினரான வைஷ்ணவி ஆகியோர் கழுத்தில் மாலையுடன் மேடையில் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Fact check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

வைரலாகும் புகைப்படத்தின் உண்மையை அறிய அதனை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, கோயம்புத்தூரைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற திமுக பெண் உறுப்பினர் வைரலாகும் அதே புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி பதிவிட்டு இருந்தார்.

அதில், “கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது போன்று கழுத்தில் மாலை இடம்பெறவில்லை. இதன் மூலம் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

தொடர்ந்து, புகைப்படத்தை Foto Forensic இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தபோது வைரலாகும் புகைப்படத்தில் கழுத்து பகுதியில் இடம்பெற்றுள்ள மாலை எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெண் திமுக நிர்வாகி ஆகியோர் மாலையுடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரிய வந்தது.

Fact Check: Muslims set fire to Hindu neighbourhood in Bangladesh? No, here are the facts

Fact Check: നേപ്പാളില്‍ പ്രളയത്തിനിടെ ഡാം തകരുന്ന ദൃശ്യം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: மது அருந்துவோருக்கு இலவசப் பேருந்து பயணம் என்று அமைச்சர் விக்னேஷ் அறிவித்தாரா? உண்மை என்ன

Fact Check: ಬೇಲ್​ನಿಂದ ಹೊರಬಂದ ಬಳಿಕ ಸ್ವತಂತ್ರ ಭಾರದ್ವಾಜ್ ಅಟ್ಟಾಹಸ ಎಂದು ಹಳೆಯ ವಿಡಿಯೊ ವೈರಲ್

Fact Check: బంగ్లాదేశ్‌లో హిందూ ఉపాధ్యాయురాలిపై అత్యాచారం, హత్య చేసిన ముస్లిం వ్యక్తి? కాదు, ఇది స్క్రిప్టెడ్ వీడియో